பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# *, *, 3 * - - - + தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள் ** منه.ش.

டங்களாலே அறியலாம். அவற்றின் அழகு, பலம் பிறர் கண்டுபிடிக்கக்கூடாத சில்லரை விவரங்களிலே கூட மனம் பொய்யாமை, இவற்றைக் காணலாம். வியாபாரம் ப்ரதான மென்றும், ேய ா க் ய ைத கேவலம் ஒரு சிறந்த தந்திரமென்றும் கொண்ட கண்டத்திலிருந்து பொய்மையின் வெள்ள அலை உங்கள் நாட்டின் மீது பெருகிவிட்டது. நகரமுழுவ திலும் பொய்யும் புளுகுமாக வியாபார விளம்பரங் களே எழுதி ஒட்டிக் கெடுத்தது போதாதென்று, உழவர் யோக்யமாக உழைக்கும் பச்சை வயற்புரங் களிலும், உதயத்தின் தெளிந்த ஒளி முதலாவது படும் மலேச்சிகரங்களிலும் ஒட்டத் தலைபட்டு விட் டீர்களே-உங்களுக்கு வெட்கமில்லையா? மானத்தை யும், உள்ள மென்மையையும்அடிக்கடிஅழித்தழித்து மழுங்கச் செய்துவிடுதல் இக்காலத்தில் மிக எளிது. ஏனெனில் இப்போது பொய்கள் வர்த்தகமென்றும் அரசென்றும் தேச பக்தியென்றும் பெயர் புனைந்து செருக்குடன் உலாவுகின்றன. எனவே, அவை நமது வாழ்க்கையில் ஓயாமல் தலையிட்டுக் கொண்டிருப் பதை நாம் கண்டித்தல் உண்மையான ஆண்மைக் குத் தகாத சித்தமென்மையாகக் கருதப் படு கின்றது.

இது எப்படி வந்து முடிந்ததென்ருலோ, மரணம் வந்தாலும் சொன்னது தவருர், அற்ப லாபத்திற்காகப்பிறரை வஞ்சித்தல் இகழ்ச்சியென்று கொள்வார், போரிலும் மானங்கெட்ட செய்கை செய்வதிலும் தோல்வியே மேலென்று கொள்வார், அப்படிப் பட்ட வீரரின் மரபில் பிறந்த நீங்கள் பொய்களை அதிதீவிரமாக வழங்குதலும், அதேைல லாபம் லம்பாதிப்பதும் இகழ்ச்சியில்லையென்று கரு தும் ஸ்திதிக்கு வந்துவிட்டீர்கள். இது " நவீனம்” என்ற பதத்தின் மோஹத்தால் உண்டானது.