பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுடைய ஜீவன் 123

N心° مسة

~

வெறுமே பயனக் கருதல் நவீனமாயின் அழகைத் தேடல் லநாதனம். அற்பமான அஹங்காரம் நவீனமாயின் மானுஷ்ய ஆதர்சங்கள் புராதனம். உபாயத்துக்கும் யந்திரத்துக்கும் வேண்டி மனிதனை நறுக்கி நொண்டியாக்குகிற திறமை எவ்வளவு "நவீன'மாயினும் அது நெடுங்காலம் வரை சாகா மல் பிழைத்திருக்க மாட்டாது.

ஆளுல் நாம் ஐரோப்பாவின் மமதாவ்சனங்களி விருந்து நம் மனதை விடுவித்துக் கொள்ள முயலும் போது, அந்த மோஹத்தின் புதைமணல்களிலிருந்து நாம் தப்ப வழி தேடுங்கால்,-மேற்கின் விஷயத்தில் முழுதுமே அவநம்பிக்கைப்படும் மற்ருேர் அந்தம் வரை போய்விடக் கூடாது.

மோஹாரம்பத்தில் உண்டாகும் மயக்கம் எவ் வளவு பொய்யோ, அவ்வளவு மோஹம் தீரும்போ துண்டாகும் விரோதமும் பொய். ஸஹஜமான மன நிலை வேண்டும். அங்குதான் நமக்கு வரும் விபத்துக் களைக் கண்டு விலக முடியும். விபத்தை விளைவித்த பொருளிடம் விரோதமும் தோன்ருது, எப்போதும் இயற்கையிலே நம் மனதில் ஒரிச்சை தோன்றலாம்; ஐரோப்பாவுக்கு அது கொடுத்த காசையே கொடுப் ப்ோமென; அ த வது இகழ்ச்சிக்கிகழ்ச்சியும் தீமைக்குத் தீமையும் . திருப்பிச் செலுத்துவோ மென்று; அதுவும் பிழை; அதுவும் அனுகரணம். மஞ்சளென்றும் செம்மையென்றும் கருமையென்றும் கபிலவர்னமென்றும் தான் நினைக்கும் ஜாதியாரிடம் அவள் நடந்து கொள்ளுகிற மாதிரியிலிருந்து வெளிப்படும் குணத்தை. அவ்ளுடைய கெட்ட காலத்தை, அணுகரணம் செய்வதாம். இந்த இடத் தில் கிழக்கினராகிய நாம் நமது குற்றத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது பாவமும் அத் தன பெரிது. அதனிலும் பெரிதென்று கூறலாம்.