பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

யத்தில் மிகவும் பாடுபட்டார். அவருக்கு வங்கா ளத்திலேதான் அதிகத் தட்டுதல் உண்டானதாகத் தெரிகிறது. ராஜ்ய ஆதர்சங்களாகிய வானத்தில் ஏறிப் பறக்க நிச்சயித்திருக்கும் நாம், மற்றபடி ஜன. வாழ்க்கையில் பின்னே நடந்து செல்ல எண்ண்ங் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

பொதுஜனக் கல்வியே உயர்தரக் கல்வியின் வேர்களுக்கு ஜீவரஸ்மேற்றுகிறது. அந்தப் பொதுக் கல்வி இந்நாட்டில் இல்லை; அதனுடன் இப்போ தொரு புதிய தொல்லையும் வந்து சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே பள்ளிக்கூடத் தொகை குறைவு. அது போதாதென்று, பள்ளிக்கூடங்களின் இட அள வைக் குறைத்து ஸாமான்களை அதிகப்படுத்தி, அவற்றின் பயனைக் குறுக்க வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாளுக்கர் இல்லா விட்டால் பெரிதில்லை, பாடசாலைக்கு வேண்டிய உபகரணங்கள் குறையக்கூடாதென்பது அதிகாரி களுடைய ககதி.

மனிதனுக்கு உணவு வேண்டும்; அதை வைத் துண்ணப் பாத்திரங்களும் வேண்டு மென்பதை நான் நன்முக அறிவேன். ஆனல் ஆஹாரமே குறையுமிடத்தில் பாத்திரம் வாங்குவதிலே அதிகப் பணம் செலவிடக் கூடாது. பாரத தேச முழுமைத் கும் அறிவாகிய உணவு இனமாகக் கொடுக்கும் அன்ன ஸ்த்திரங்கள் ஸ்தாபனம்ான பிறகு, அதனை வைத்துண்ண நாம் தங்கத் தாம்பாளம், வேண்டு மென்று பிரார்த்தனை பண்ணலாம். நாம் ஏழ்மைத் கிரைப்பட்டு நிற்கையிலே, கல்விக்குரிய உபகரணத களை அதிகச் செலவுக் கிடமாக்குதல், ஒருவன் தன. பணமுழுவதையும் கொடுத்துப் பணப் பைத் விலைக்கு வாங்கும் மடமைபோலாகும். முற்றத்தில் பாய்களே விரித்து நம்முடைய ஜனக் கூட்டங்க