பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கற்பிக்கும் பாஷை j$g

லாயிற்று. "ஆஹா வங்காளிகளுக்குக் கல்வியில் உள்ள அபிமானம் இவ்வளவுதாளு கோகலேயின் கட்டாயப் படிப்பு மசோதா சட்டமாயிருந்தால், அது படிக்க ஸம்மதமில்லாத வங்காளிகளுக்குப் பெருங் கொடுமையாக முடிந்திருக்குமன்ருே ?” என்று கூறி ஏளனம் புரிந்தது. இவை குரூரம்ான வார்த்தைகள். தனது ஸ்வதேசத்தைக் குறித்து எவனும் இந்தமாதிரி வார்த்தை சொல்லியிருக்க மாட்டான். இன்று இங்கிலாந்தில் கல்வி விருப்பம் திடீரென்று குறைவு பட்டால், இதே பத்திரிகை உபாயங்களால் அவ் விருப்பத்தைத் துரண்டிவிட வேண்டுமென்று சிபார்சு செய்திருக்கும்.

எனினும், இவர்கள் தமது நாட்டுக் கிரங்குவது போல் இந்தியாவுக் கிரங்குவார்களென்று நம்புதல் அவமானத்துக் கிடமாகும். ஆயினும், தேச பக்தியின் அவளரங்களையெல்லாம் திருப்தி செய்துகொண்ட பிறகு, பின்னும் கொஞ்சம் நல்லெண்ணம் மிஞ்சி லோபோகார்மாக வடிவெடுத்திருந்தாலும் பெரிய காரியமன்று. மனிதனுடைய தர்ம சிந்தையின் அபிவிருத்தியிலே, தற்கால நிலைமையில், இதர தேசத்தாரை நஷ்டப்படுத்தி ஸ்வேதசத்துக்குப் பொருளும், பலமும் தேடுதல் ஸாத்யமாகிறது. எனிலும் ஆரோக்யம் குறைவுபட்டு வரும் தேச மொன்றைப் பார்த்து, அதற்கு வைத்தியர் ஏடுபடு வதைக் காட்டிலும், பாடை துரக்குவோர் தயார் பண்ணுவதே செலவு குறைந்த உபாயமென்று சொல்ல இடம் கொடுக்கக் கூடாது.

எனிலும் நமக்குள் சுதேசிய ஞானம் தகுந்தபடி ஏற்படாத காரணத்தாலேதான், பிறர் நமது லெளகீக அவஸரங்களையும், கல்வி யவஸ்ரங்களையும் இத்தனை இகழ்ச்சியாகக் கருத நேரிடுகிறது. இது மறுக்க முடியாத விஷயம்.