பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கற்பிக்கும்.ைேனத் #41

ரென்று பரிபூர்ணமாக புத்தியில் தரிக்கவில்லை. அது கொண்டே நாம் நமது நாட்டுக்கு முழுக் கிரயம் கொடுக்க இயலவில்லை. நாம் கேட்பது முழு அளவில் கிடைக்கவில்லையெனில், அது கொடுப்பவன் விருப்ப மின்மையாலன்று, நமக்கே முழு விருப்பத்துடன் கேட்க விருப்பமில்லையாதலால்தான். -

கல்வியைப் பரப்புதல் என்ற விஷயத்தைக் கவனிக்கப்போகுமிடத்தே, முதல் கஷ்டம் இங்கிலீஷ் கருவியாக இருத்தல் என்று காண்கிருேம். அன்னியர் கப்பல் துறைமுகத்தில் சரக்குகள் கொண்டு சேர்க் கும். உள்நாட்டுச் சந்தைகளில் கொண்டுவந்து பகுத்துக் கொடுக்காது. நாம் பரிபூர்ண நம்பிக் கையை அன்னியக் கப்பலில் வைத்தோமானுல் நமது வியாபாரம்_பட்டனத்தோடு நின்றுபோம். இது வரை நாம் இதைத் தவருகவே நினைக்கவில்லை. நாம் இதழ்களால் ஏதுரைத்தாலும் ஹிருதயங்களில் நமக்குத் தெரிந்த தேசம் பட்டணமாத்திரமே. நமக்கு தமது பாஷையினிடத்தே அதிக தயவு தோன்றும்போது இதன் மூலமாகப் பிரதம சிகை: பயிற்ற இடங் கொடுக்கலாமென்று நினைத்தோம். அதற்குமேல் வங்காளி பாஷை எட்ட விரும்பினுல், அதை நகைத்தோம். * - ..

இந்த திடனற்ற ஆத்ம-ஸ்ம்சயம் நம்மிடம் எத்தனை காலமிருக்கவேண்டும்? நம்முடைய தாய்ப் பாஷையில் உயர்தரக் கல்வி கற்பித்து அக் கல்வியை முழுதும்.நம்மதாக்கிவிட வேண்டுமென்று சொல்லும் தைரியம் நமக்கெப்போதுமே வாராது போகுமா? ஜப்பான் தனக்கு வேண்டியதை மேற்குத் திசைவி லிருந்து பற்றிக்கொண்டதன் கார்ண்ம் யாது? அதுவும் இத்தனே சீக்கிரத்தில்? அவள் மேற்குக் கல்வி யைத் தனது பாஷையில் சிறைப்படுத்திக்கொண் டாள். ஜப்பானிய பாஷை நமது பாஷையைக்