பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்


இடங்களிலும், இன்று நமது வீழ்ச்சிக் காலத்திலே கூடத் திண்ணப் பள்ளிக்கூடங்கள், சாஸ்த்ரப் பாட சாலைகளிலும் பிள்ளைகள் கூடவில்லையா? அது போலே இப்போதும் நாம் ஸர்வகலாசாலை வைத்து நமது பிராண சக்தியால் போஷிப்போமென்று ஏன் தைரியத்துடன் சொல்லக் கூடாது? ஸ்ருஷ்டியில் முதற்படி விரும்புதல், இன்று நமது தேசத்தில் அவ் வித விருப்பத்தின் சலனங்கள் இல்லையா? ஆராய்ச்சி யிலும் தியானத்திலும் படிப்பிலும் ஈடுபட்ட நமது நாட்டு வித்வான்கள் தமது வித்தையைப் பிறருக் குக் கொடுக்க வேண்டுமென்று இச்சைப் படுவது போல் அதை அவர்களிடம் பெறவேண்டுமென்று ஏறிச் செல்லும் நீராவியோடு கலந்து செழிப்பை யுண்டாக்கும் மழையாக விழுகின்ற மேகங்களைப் போலத் தாய்ப் பாஷையிற் கலந்து தாய் நாட்டி லுள்ள தாகங்கொண்டோருக்குத் தண்ணிராகவும், பசித்தோருக்கு ஆகாரமாகவும் பெருக்கெடுக்க ஆசை கொள்வோர் யாருமில்லையா?

கடைசியாகக் கூறிய எனது வார்த்தைகள் கிரி யாம்சையில் லாத்யமானவையல்ல; ஒரு கருத் தையே அவை வெளியிடுகின்றன. ஆனல் இந்தக் காலம் வரை கிரியாம்சையில் ஸாத்யமாகக் கூடிய ஆலோசனைகள் ஒட்டுப் போடுவதற்குத்தான் உதவி யிருக்கின்றன; கருத்துக்களே உண்மையான சிருஷ்டி செய்துள்ளன.