பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

பேசு முன்னர், இவர் இந்தியாவின் எந்த உண்மையைத் தெரிவித்தபடியாலே இங்ஙனம் பாரத பூமிக்கு பூலோக குருத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்க வல்லோர் ஆயினர் என்பதைச் சற்றே ஆராய்ச்சி புரிவோம் :

அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள் களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சியேது? துயரமேது? எல்லாம் ஒரே பொரு ளென்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேலும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும், ஆதரவும், ஸ்ந்துஷ்டியும், பக்தியும் செலுத்துவான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியிலிருப்பான். இங்ஙனம் மாருத சந்தோஷ நிலையே முக்தி நிலையென்றும் அமர பதமென்றும் கூறப்படுவது. இதனை மனிதன் அப்யாஸ்த்தாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத் தில் எய்திவிட முடியும். இஃதே வேதரஹஸ்யம்.

இந்த ஆத்ம ஐக்கியமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பா வுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்த்ர கவிச் சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ங்னம் அற்புத வழிபாடு செலுத்திற்று.

- சி. சுப்பிரமணிய பாசதியார்

குறிப்பு : இக்கட்டுரை சுதேசமித்திரனில் 1931 #© 25-ஆம் தேதியன்று வெளியாயிற்று.