பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ww (م 4

பக்தி விசுவாசங்களும் உடையவராகிய ராஜ ஜாதி யாரிடத்தில் உள்ள் நல்ல அம்சங்களுடன் நாம் ஒட்டலாம். அங்கே சத்ருக்கள் நம்மை எங்ஙனம் தாக்கியபோதிலும், நாம் வெற்றி பெறுவோம். நினைத்த பொழுதெல்லாம், புற வெற்றி கிடைக்கா விடினும், அகவெற்றி நிச்சயம். நாம் அற்பர்களாய்ப் பயம் கொண்டிருந்தால், நம்மை ஆள்வோரின் பெரிய கொள்கைகளை யெல்லாம் நமது மட்டம் ஆக்கி விடுவோம். அவர்களுடைய கெட்ட குணங் களே தலைதுாக்க இடம் கொடுப்போம். பிராமணன் தன்னைக் கீழ்ஜாதி என்பதைச் சூத்திரன் எப். பொழுது ஒப்புக் கொண்டானே, அப்பொழுது பிரா மனனுக்குப் பள்ளம் தோண்டியாய்விட்டது. எளியவன் வலியவனுக்குச் செய் யு ம் தீமை வலியுவன் எளியவனுக்குச் செய்யும் பகைமைக்கு நிகராகக் கூடும். - --- - - -

ஒருமுறை உயர்ந்த ஸர்க்கார் உத்தியோகஸ்தர் என்னிடம், போலீஸ் கொடுமையைப் பற்றி எப்போதும் முறையிடுகிறீர். என் மட்டில், நீங்கள் சொல்வதை நம்பக்கூடாதென்ற எண்ணமில்லை. ஆனால், பெயர்வழி, விஷயம்.எல்லாம்_கொண்டு வந்து ருஜுப்படுத்தும்’ என்ருர் உண்மைதான். எல்லா அநியாயங்களையும் பஹிரங்கமாகத் துரற்றி உலகறிய மீண்டும் மீண்டும் முறையிடத் தக்க தைரியவான்கள் சிலரேனும்ாநமது தேசத்துக்கு வேண்டும். ஆனல் அற்பப் போலீஸ் சேவகளுக இருந்தபோதிலும் அவன் பின்னே பூதாகாரமான ராஜ்யாதிகாரம் ஒன்றிருக்கிறது. அவன் மேல் குற்றஞ் சாராதபடி காப்பாற்றுவதற்காகப் பொதுப் பணத்திலிருந்து ஆயிரக் கணக்காகச் செலவு செய்யக் கூடுமென்ற பீதியை மறுக்க முடியாது. நம்மை நசுக்கினல் பொறுத்துக் கொண்டிருப்பதே நம்