பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும் 73

ஆங்கிலேயன் இந்தியா விஷயங்களில் சிரத்தை யெடுப்பது மானங்கெட்ட அதிகப்ரஸங்கித்தன மென்று ஆங்கிலோ-இந்தியன் நினைக்கிருன். நம்மை ஆள்வது நாம் கேள்விப்பட்ட மஹத்தான இங்கிலீஷ் ஜாதியன்று; நாம் ஒரு உத்தியோகஸ்தக் கூட்டத் திற்குக் குடிகள் என்பதை நம்மவர் அறிந்திருக்க வேண்டும். அந்தக் கூட்டம் ஸர்க்கார் கச்சேரி என்ற திராவகத்தில் ஊறப் போட்டு வைத்தமையால் நைந்துபோன இயல்புடையது. மனதிலும், ஹ்ருதயத் திலும், உயிரிலும் உண்மையான மனிதத்தன்மை யுடைய மனிதர் நம்மை ஆளவில்லை. ஒரு விசேஷ நோக்கத்தின் பொருட்டுக் கத்தரித்து முத்திரை போட்டு வைக்கப்பட்ட மனிதர் ஆளுகிரு.ர்கள்.

புகைப்படம் பிடிக்கும் காமிரா ஒரு கருவி. அது தெளிவாகப் பார்க்கும். ஆனல் முழுதையும் பார்க் காது. நேராக முன்னே இருப்பதை மாத்திரந்தான் பார்க்கும். எனவே அது குருட்டுத்தனமாகப் பார்க் கிறதென்று கூறலாம். ஜீவக் கண்ணுே எனில் யாதேனுமொரு குறித்த நோக்கத்துக்கு முழுதும் பயன்படாவிடினும், பொதுப்படையாக மனுஷ்யரின் பரஸ்பர விவகாரங்களுக்கு உசிதமானது. எனவே நமக்குக் கடவுள் காமிராக் கண்ணுடி கொடுக்காமல் கண் கொடுத்தாரே என்று நாம் நன்றி செலுத்தக் கடவோம். இந்தியா கவர்ன்மெண்ட் விஷயத்தில் அவர் நமக்கென்ன வஸ்துவைக் கொடுத்துவிட்டா ரென்பதைப் பார்ப்போம்,

பெரிய இங்கிலிஷ்காரன் நமது விதி வசத்தால் கடலுக்கப்பாலே இருக்கிருன். இங்கு வருமுன்னே அவனே ராஜ்ய தந்திரம்' என்ற கத்திரியால் கத்திரித்து விடுகிருர்கள். தானும் வளர்ந்து பிறரை யும் வளரச் செய்வதாகிய அம்சத்தைத் துண்டித்து அவனுடைய ஆண்மையில் முக்காற் பங்கைக்