பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும்

மிருந்து தப்பிச் செல்லாது. அது விறைத்து நின்று விட்டால், அங்கே பறவைகள் உண்டு என்று அர்த்தம் கொஞ்சம் தள்ளி, அல்ல ; அங்கேயே, பிராங்கின் நாசிக்கு நேர் கீழே, அவை இருக்கும். அவை ஒடிஞல், அதுவும் சேர்ந்து ஓடும் ; அப்பொழுதும் அவை பிராங்கின் நாசி அடியிலேயே தென்படும். அது பாம்புகளைக் குறி வைப்பதில்லை : ஒடை ஆமைகளைச் சுட்டுவதில்லை; முயல்களைக் காட்டுவதில்லை. காடைகளையே சுட்டிக் காட்டும்.

நாய்கள், எல்லா நாய்களையும் போலவே, தங்களுக்கு எதிர்ப் பட்ட மரங்கள், அடி மரங்கள், பாறைகள், பாதைகள் அனைத் துக்கும் மரியாதை செலுத்தின. சென்ற வாரம் வழியில் ஒரு கடியாரத்தைத் தவறவிட்டு விட்டு இப்போது தேடிச் செல்பவை போல, அவை ரஸ்தாவில் ஓடின. பிறகு சீட்டி சப்தம் கேட்டுத் திரும்பி வந்தன ; வேலைக்குப் போக நேரமாகிவிட்டது என்று அவை எனக்கு அறிவித்தன. நான் தாத்தா செய்வது போல், என் கையை அசைத்து, அழுது வடிந்த சோளக் கொல்லுேழின் பக்க மாக வீசினேன். பிராங்க் லேண்டியைப் பார்த்தது. பிராங்கைப் பார்த்தது. பிறகு இரண்டும் துக்கத்தே நோக்கின. வேண்டாம். இது நகைக்கத்தக்கது

அவை கூறின. -

ஒடுங்கள். நாசமாய்ப் போக ‘ என்று நான் கட்டளை

யிட்டேன். தாத்தா அருகில் இல்லாததால் நான் தாராளமாக

ஏச முடியும். ! -

நாய்கள் தோள்களைக் குலுக்கின. லேண்டி கிளம்பி, வயலின் ஓரங்களைச் சுற்றி நீண்ட சதுரமிட்டு ஓடியது. பிராங்க் ஒரு திசை யில் குறுக்காகச் சென்றது. பிறகு தன்னைச் சுற்றித் திருப்பி, மறு திசையில் குறுக்கே ஒடியது. ஸேண்டி தனது ஆராய்ச்சியை முடித்ததும், திரும்பி வந்து, நாக்கைத் தொங்கவிட்டு, அதன் முகத்தில் சிறிதே இகழ்ச்சி காட்டியபடி என் முன்னுல் உட்கார்ந் தது. பிராங்கும் அதே மாதிரி இகழ்ச்சிக் குறிப்போடு வந்து சேர்ந்தது. .

நல்லது. உங்கள் போக்கிலேயே செயல் புரியுங்கள். நாசமாகுக ! என்றேன்.

நாய்கள் பரஸ்பரம் பார்த்தன. சிறுவன் புத்தி இருப்பதாகஏதோ கொஞ்சம்தான்-காட்டிக் கொள்கிருன் என்று அபிப் பிராயம் பரிமாறின. லேண்டி தன் தலையை ஆகாயத்தில் உயர்த் திச் சோதித்தது. உப தலைவரான பிராங்க், தன் கால்களில் ஒட்டி யிருந்த முட்தோடு ஒன்றைக் கவ்விக் குதப்பியது. இதற்குள் ஸேண்டிக்கு துப்பு கிடைத்துவிட்டது. பைன் மரங்கள் நின்ற உயர்ந்த மண் மேட்டை, நனைந்த வைக்கோலிடையே சிறு தீவு போல் தோன்றிய இடத்தை, அது தன் நாசியால் சுட்டியது. அங்கு மரத்துாள் குவியல் ஒன்று இருந்தது. உயர்குல மங்கை பிரவேசிப்பது போல், நாய் தன் முகத்தை நிமிர்த்தியவாறே