பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

அது ஏன் என்று நானறியேன். அதை உபயோகிக்கும் சிறு காடைக் கூட்டம் அருகே இல்லாத மரத்துாள் குவியல் எதையும் நான் கண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஒரு வேளை அவை அதில் புரள்வதற்கு ஆசைப்படலாம். அல்லது, ஆரோக் கியமாய் இருப்பதற்காக அவை நொய்க்குப் பதில் மரத்துள்ளேச் சாப்பிடலாம். வேறு ஏதாவது கற்றாயா ? -

ஆமாம். பிற்பகலில் நேரம் ஆகிவிட்டதும், முக்கியமாக மழை ஈரம் இருக்கும்போது, பறவைகள் சதுப்பில் தங்க விரும்பு வதில்லே. இக்கரையில் தங்கிலுைம் தங்கும். அல்லது பறந்து போய் தூரத்தில் தங்கவும் கூடும். மேலும், அவை அதிகாலையில் பறப்பதுபோல், நேரம் ஆனதும் அதிக தூரம் பறப்பதில்லை. அரிவின்மீது நின்றுகொண்டு, நாயை அனுப்பிப் பறவைகளைக் கலைப்பதற்கு வசதி இருக்கையில், சதுப்பில் சுட முயற்சிப்பதில் அர்த்தமே கிடையாது. ’’

தாத்தா, கண்களைச் சுழற்றியபடி, நாய்களை அனுப்பவா ?” என்று மெதுவாகக் கேட்டார்.

‘ நல்லது. நாய்கள் தாமாகச் சென்றன. நானும் அவற்றாேடு போவதை அவை அனுமதிக்கவில்லை. எனவே நான் சரிவின் மேலே நின்று, எளிதில் நான்கு பறவைகளைச் சுட்டேன். ‘ என்று நொண்டிச் சமாதானம் கூறினேன்.

‘ வேறு ஏதாவது ? ‘’ - “ நான் தனியாகச் சென்றால், மிக நன்றாகச் சுடுவேன் என உணர்ந்தேன். வேறொருவனேப் பற்றி நாம் கவ்லப்பட வேண்டிய அவசியமே இல்லை. சாதாரணமாக நம்மால் சுட முடியாத பறவைகளைத் தாராளமாய்க் குறி வைக்கலாம். போகப்போக எப்படியோ நாம் தன்னம்பிக்கை பெற்றுவிடுகிருேம். ஏனெனில் தாம் இளக்கமுறுகிருேம் ; நாய்களுக்கு ஏமாற்றம் தர விரும்புவது

கில்லே.

அவ்வளவு தானு ? ’’ ‘இன்னுமொரு விஷயம். மனிதனே விட ஒரு நல்ல நாய் சிஜப்பாக அறிந்திராத எதையும் எவரும் அருமையான நாய்க்குக் கற்றுக் கொடுப்பதற்கில்லை என அறிந்துகொண்டேன். ”

தாத்தா பெரிய, விசாலமான, புகையிலைக் கறை படிந்த, மீசை நிறைந்த சிரிப்புச் சிரித்தார். இதைக் கேட்கலாம் என்று நான் நம்பியிருந்தேன். குழந்தாய். மிகச் சொற்பமான நபர்களே இதைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு நாயை இட்டுச் சென்று, அதை ஒழுங்காகப் பழக்க வேண்டியது ; அப்புறம் அதை அதன் போக்கில் விட்டுவிட்டால், நமக்கு நல்ல நாய் ஒன்று கிடைக்கும். இது பையன்களுக்கும் பொருந்தும். ஆரம்பத்தில் ஒரு நாயைக் கெடுத்து விட்டால், அப்புறம் எவ்வளவு கத்தியும் அதைத் திருத்த முடியாது. இது வு ம் பையன்களுக்குப் பொருந்தும். ஆரம்பத்தில், அவன் மோசமாக நடக்கையில்