பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

அதன் முன்னல் உணவுத் தட்டை வைப்போம். அது தீனிக்காகப் பாயும் போது, நான் அதன் வாலைப் பிடித்து இழுத்து, ‘ நில்லு !” என்பேன். அதைச் சிறிது தட்டிக் கொடுத்து, அது மிக அருமை யான தாய் என்று கூறுவேன். பிறகு ஒடிப் போ என்று கூறி. அதை விட்டு விடுவேன். இந்த விஷயத்தைக் கிரகிக்க அதற்கு ஒரு வாரம் கூடப் பிடிக்கவில்லை. அது உணவை நோக்கி ஓடும். நில்லு என்பேன். நின்று விடும். விரல் சொடுக்கையும், ஒடிப்போ என்ற சொல்லையும் எதிர்பார்த்து அது தலையைத் திருப்பியபடி காத்து நிற்கும். பிறகு தான் அது சாப்பிடும். சாப் பாட்டின் நடுவில் நான் மறுபடியும் அதன் வாலை இழுத்து, * நில்லு ‘ என்பேன். இந்தச் சொல்லை. அது இரண்டு நாட்களில் கற்று விட்டது. நான் நில்லு ‘ என்று சொல்கையில், அது உணவை விழுங்கிக் கொண்டிருந்தால் கூட அப்படியே நிறுத்தி விட்டு, பின் கால்களில் குந்தி, அடுத்த சொல்லை எதிர்பார்த்தி ருககும். -

எல்லா நாய்க் குட்டிகளையும் போலவே, இதுவும் குச்சிகள் அல்லது பந்துகளின் பின் பாய்ந்தோட ஆசைப்பட்டது. குச்சி அல்லது பந்தைக் கவ்வியபடி விலகி ஒடி நமக்குத் தொல்லை தரவும் விரும்பியது. பிறவியினல் அது வேட்டை பொறுக்கும் நாய் அல்ல. விளையாட்டுக் காட்டும் நாய்தான். அந்த சுபாவத்தைப் போக்கும் முறையையும் தாத்தா எனக்குக் கற்றுத் தந்தார். நாயின் கழுத்துப் பட்டியில் ஒரு கயிறு கட்டினுேம். குச்சியை விட்டெறிந்தோம். அது குச்சியைக் கவ்விக் கொண்டு ஒடத் தொடங்கியது. தாத்தா சட்டென்று கயிற்றைச் சுண்டி இழுத்து, * எடுத்து வா என்று கத்தினர். உடனே கயிற்றைப் பிடித்து நாகை அருகே வேகமாய் இழுத்தார். அதனல், கால்கள் தரையில் அதிகம் பதியாதவாறே அது எங்கள் முன் வந்து சேர்ந்தது. இப்படி மூன்றே தினங்களில், எடுத்து வா என்னும் பதத்தையும் அதற்குக் கற்றுக் கொடுத்தோம். பொருள்களை எடுத்து வரும் விவகாரம் வெறும் விளையாட்டு என்னும் நினைப்பை அது விட்டு விட்டது. நாய்க்கு அதுவும் முக்கிய காரியமாயிற்று.

வேலைக்கும் விளையாட்டுக்குமுள்ள வித்திய்ாசத்தை நீ தான் நாய்க்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபற்றி அதற்கு அடிதகடி நினைவுபடுத்தவும் வேண்டும். முயல்கள் விஷயம் போல் தான. முயல்களேத் துரத்த விரும்பாத பறவை பிடிக்கும் நாய் எதுவும் கிடையாது. முயல்கள் அதற்கு விளையாட்டு. கர்டை களோ_கடும் உழைப்பு ஆகும். பறவை நாய் ஒரு முயலைக் குறி பார்க்கிறது என்பதை நாம் எளிதில் கண்டு விட முடியும். தின் உடல் முழுவதையும் வரேத்துக் கொண்டு, காதுகளை நிமிர்த்தி, நாசியை ஒரு. தினுசாகக் கீழ்ே பதித்தவாறு அது சுட்டும். பிறகு அது குதிக்கும். ஏதோ தவறு செய்து விட்டதாக உணர்ந்தாலும் கூட, தான் செய்த தவறு என்ன என்று புரிந்து கொள்ளாமல்