பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதிய நாயும் முதிய மனிதனும் I G3

விழிக்கிற பட்டிக்காட்டு முட்டாள் போல, அது உன்னை நோக்கும். முயல்களின் பின்னல் ஓடாதிருக்கும்படி நாயைப் பழக்குவதற் குரிய் வழி ஆரம்பத்திலேயே அதை அடக்குவது தான். இலேயுதிர் காலத்தில், பறவைகளுக்குரிய பருவம் தொடங்குவதற்கு முன் நாம் அதைக் கவனிப்போம் ‘ என்று தாத்தா சொன்னர்.

இடைக் காலத்தில், இந்தக் கோடையில் அது தறிகெட்டுத் திரியாமல் பார்த்துக் கொள்வோம். கோடைக் காலத்தில் தான் நாய் பல கெட்ட பழக்கங்களை அடைகிறது. அதையும், இதையும் எதையுமே துரத்திச் செல்லும்படி அதை அவிழ்த்து விட்டு விட்டால், பிறகு இலையுதிர் காலம் வந்ததும் அது தன் உண்மை யான தொழிலை மறந்து விடும். குறிப்பாக எதற்கும் புயனில் லாமல் போகும். நாய்கள் துரத்தி ஒடுவதை இரண்டு விஷயங் களில் தான் அனுமதிப்பேன். முயல்களைத் துர்த்துவது ஒன்று. இரண்டாவதாக, காடை வேட்டையின் போது. நாய்க் குட்டி முதலில் இரண்டு செயல்களையும் புரியும். ஒன்று இயல்பான உற்சாக மிகுதியாலும், மற்றது எளிய நாய்க்குட்டித் தனமான மடமையிலுைம் நிகழ்வது. காடை விஷயத்தில் மற்றாெரு நாயைக் கண்டு பொருமைப் படாத எந்த நாய்க்கும் நான் ஒரு காசு கூடத் தரமாட்டேன். ஆனால், அந்த நாய் தனது பொருமையைக் கட்டுப் படுத்த-அம் முயற்சி அதற்கு வெறி அளித்தாலும் கூட-கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நீ வைத்திருப்பது நாய் அல்ல. மிகைபட நடிக்கும் ஒரு நடிகனே யாகும்.’’

டாம் எனும் நாய்க்குட்டிக்கு தோட்டத்து ஒழுக்கங்களே, வசந்த காலம் பூராவும், கற்றுக் கொடுத்தோம். வ்சந்தத்தில் கற்றுக் கொடுத்ததை நினைவில் வைத்திருக்கும்படி அதை வற்புறுத் துவதில் கோடையைக் கழித்தோம். எழு,'’ ‘’ படு ’’ என்ப வற்றை அது கற்றது. அதுதாவி ஏற வேண்டிய இடம் காரின் பின் பக்கமே தவிர முன் புறமல்ல என்பதைக் கற்றது. எடு ‘ போ ஒடிப் போ நில்லு ஆகியவற்றைக் கற்றது. ஊது குழல் தகரப் பொம்மையல்ல, விசேஷக் குறிப்பு கொண்டது என்றும், நாம் ஒரு பக்கமாகக் கையை ஆட்டினல் அதன் பொருள் மறு திசையில் ஒடிப் போக வேணும் என்பது அல்ல என்றும் அது கற்றது. இந்தக் காலத்தில் எல்லாம் அது காடையின் வாசனையைக் கூட அறியவில்லை. -

கோடை சென்றது. இலைகள் இளஞ் சிவப்பாய் மின்னின. பறவைகளின் பருவம் தொடங்கக் கூடிய சந்தர்ப்பம் வந்தது. நான் எனக்காகப் பெற்ற நாய்க்குட்டி அதன் தரத்துக்கு ஏற்ப வளர்ந்திருந்தது. தொழில் பயிற்சியைத் தபால் மூலம் கற்று விட்டு, அம்முறைகளைச் செயலாக்கும் வாங்ப்பெருமல் இருக்கும் மாணவர்களைப் போல் தான் அதுவும் இருந்தது. அது முட்டாளா, மேதையா என நான் அறியவில்லை. ஆயினும் அதன் உணவு முறை ஒழுக்கம் குற்றமற்று விளங்கியது. -