பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தத்தில் குதிரை வெறி zaz

டிருக்கலாம். ஆனல் அவற்றினும் சிறந்தவற்றை பிறகு ஒரு போதும் நான் உண்டதேயில்லை.

முடிவில், மூன்று மைல் படகில் சென்று வந்ததாகத் தெரிய வரும். உதடுகள் உப்புக் கரிப்பதுடன், தண்ணிரில் பட்டுத் தெறித்த சூரிய ஒளியால் எரியுண்டிருக்கும், முதுகு வலிக்கும். உப்பு நீரில் நனைந்த வெறும் கால்கள் சுருக்கம் விழுந்து தோன்றும். கடைசி அரை மைல் தூரத்தைப் படகு விலித்துக் கடக்க முயல்கையில் அதற்கு முடிவே இல்லாதது போல் தோன்றும். படகைக் கரையில் அப்படியே அழுக்காய், சேறும், மீன் செதிள் களும் படிந்த நிலையிலேயே போட்டுவிட்டு, வீடு செல்லவரம் என்ற ஆசை பலமாக எழும். ஆனல், சிலசமயம் அவ்விதம் செய்து தாத்தாவிடம் அகப்பட்டுக் கொண்டபோது, அவர் காட்டிய ஏளனத்தின் சுமை என்னுல் சகிக்கமுடியாததாகக் கனத்தது. ஆகவே, நான் படகைக் கழுவி சுத்தப்படுத்தி, இறுக்கிக் கட்டிவைட்பேன். பிறகு, மீன்களையும் துடுப்புகளையும் சுமந்து மிகுந்த களைப்புடன் வீடு சேர்வேன். வேதனையால் அழவேண்டும் போலிருக்கும். என்னைப் படுக்கப்போகும்படி எவரும் கட்டாயப் படுத்த நேரிடாது. நான் முற்றிலும் சோர்ந்து போயிருப்பேன். கோடை முடிவதற்குள், அந்த வட்டாரத்தின் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு மீன் வளையும், மணல் திட்டு, ஓடை, குடாக்கள் எல்லாம் எனக்கு நன்கு பழக்கமாகிவிட்டன. குடாக் களின் அருகே அலைகள் செய்யும் தந்திரங்களையும், காற்று வீச்சுக்கு ஏற்ப நீர் வடியும் தன்மையையும் நான் அறிந்தேன். முயற்சி, தவறு, காலில் வெட்டுகள், புண்பட்ட விரல்கள், கொசுக் கடி, மணல் ஈக்கள், வெயிலின் சூடு எல்லாம் நிறைய உண்டு.

கோடை முடிவதற்குள் நான் ஒருவாறு அமைதி பெற்றிருப் பேன். தாத்தா சொன்னது சரி. அமைதி, அடக்கம், பொறுப்பு ஆகியவற்றின் மதிப்பைக் கற்றுக்கொள்ள நமது சொந்தப் படகில் நீர் மேல் தனியாகச் செல்வதுபோல் சிறந்தது வேறு எதுவுமில்லை. நம்மை நாமே களிப்பித்துக் கொள்வதற்குத் துணைவர்கள் தேவை யில்லை ; சில சமயங்களில் அருகில் ஆட்கள் இல்லாதிருந்தால் தான் அதிக மகிழ்வு கிட்டும் என நான் உணர்ந்தேன். பெரிய நீர்ப்பரப்பின் மீது தனியாக இருக்கும் ஒரு பையன் மிகவும் சின்ன

விஷயம்தான்.

நான் ஒரு முறை சுழலில் அகப்பட்டு, குடா வழியாகக் கடலுக் குள் அடித்துச் செல்லப்பட்டேன். படகைக் கட்டுப்படுத்தி மறுபடியும் கரை சேர்வதற்குள் அதைக் கடலில் ஒரு மைல் தூரம் போகவிட்டேன். இதை நான் தாத்தாவிடம் சொல்லவேயில்லை. சதுப்பின் சிறு பாளம் ஒன்றில் சிக்கி ஒரு மனிதன் செத்துக் கிடந்ததை-அவன் உடலில் மிஞ்சியிருந்ததை-பார்த்தேன். அதையும் நான் யாரிடமும் கூறவில்லை. அவன் நீண்டகாலம் தண்ணிரில் கிடந்திருக்கவேண்டும்.