பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

என் பாதத்தில் தைத்திருந்த துருப்பிடித்த ஆணியை, நெருப்பில் சூடுபடுத்திய கத்தியினுல் நான் அறுத்து எடுத்தது. பற்றியும் சொல்லவில்லை. அது எனக்கு வெகு தெளிவாக தின்ேவிருக்கிறது. குதிகால் சதையில் ஆழப் பதிந்துவிட்ட ஆணியை எடுக்க, பாதத்தை வெட்டியும், குத்தியும் கஷ்டப்பட் டேன். கத்தியோ மழுங்கல். நான் அழுதும் ஏசியும் அவதி ஆற்றேன். என் தாயிடம் அயடின் கேட்டபோது, ஒரு கிளிஞ்சல் உள்தத்தை வெட்டி விட்டதாகச் சொன்னேன். அப்பொழுது செப்டம்பர் வடகாற்றினுல் பொங்கி எழும் அலைகள் பாயும் பருவம் , சதுப்பில் வாத்துக்கள் சேரும் காலம். நான் படகில் போகாதபடி வீட்டில் தடுத்துவிடுவர் என்ற பயம் எனக்கிருந்தது. நுனிகள் மட்டுமே தெரியும்படி அலைகள் சதுப்புநிலப் புல்களை மூடிவிடும் போது, பதுங்குவதற்கு இடமின்றி பெரிய ரெயில் பறவைகள் நமக்கு முன்னுல் விகாரமாகச் சிறகடித்துச் செல்லும். காட்டுக்கோழி மாதிரி பெரியவை இவை. இப் பறவைகளுக்கு மிருதுவான மான் கண்கள் இருக்கும். அப்பொழுது நான் படகைத் தள்ளும் கோலேக் கையாள்வது உண்டு. பறவைகள் மிக மெதுவாகச் சென்றதால், நான் கோலைச் சகதியில் ஊன்றி விட்டு, துப்பாக்கியை எடுத்து, நிதானமாகச் சுட முடிந்தது. சில சமயம் படகைக் கரை சேர்த்துவிட்டு, கீழே இறங்கி, கரையின் ஒரமாக நடப்பேன். வெள்ளம் மூடிய சதுப்பு நிலத்திலிருந்து ஓடிவந்த பறவைகள் அங்கு தங்கியிருக்கும். அவை கிளர்ந் தெழுந்து, ஸ்னேப் பறவைகள் போல் தரைமட்டமாகவே பறந்து, நீரை நோக்கி ஓடும். அது சுடுவதற்கு அருமையான வாய்ப்பு.

மீண்டும் பள்ளி நாட்கள் துவங்கின. பருவநிலை அதிகக் குளிர்ச்சி பெற்றது. நாங்கள் படகைத் தூக்கி, மழைக்காலத்தில் பாதுகாப்புடனிருக்க உருளைகளில் வைத்தோம். நான் மறுபடியும் பள்ளிக்கூடம் போனேன். கொஞ்சம் பெரியவகிை விட்டது போன்ற உணர்ச்சி அதிகமும், பிையன் என்னும் நினைப்பு குறை வாகவும் இருந்தன எனக்கு ஒரு சிறுவனிடமுள்ள கோணல்க்ளைப் பதமாக்குவதற்கு ஏற்ற சாதனம் படகுதான் என்று சொன்ன போது, தாத்தா பொருள் உணர்ந்தே பேசியிருக்கிரு.ர். எனது மாற்றம் என் அபிவிருத்தி அறிக்கையில் சிறிது தென்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவ்விருஷம் மோட்டார் படகு ஒன்று எனக்குக் கிறிஸ்துமஸ் பரிசாகக் கிடைத்தது. அதைப் பெறும் தகுதியை நான் எய்தியிருந்ததாகத் தாத்தா சொன்னர்.