பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோம்பல் தினம்-பெண்கள் இல்லை

இல்லை, மிஸ்டர் ஜிம்மி என்றான். ! . . . . . . .” * நல்லது பையா. வேறெங்காவது பார். வாயில் போடும் புகையிலேக்கும், மூக்குப் பொடிக்கும், ஒரு-பென்னிக்குரெண்டு-மிட்ட்ாய் ரகங்களுக்கும் பக்கத்தில் இருக்கும். உனக்குத் தான் தெரியுமே. தேங்காய்ப் பூ கலந்த இளஞ்சிவப்பு மிட் டாய்களும், மார்ஷ்மெல்லோ சாக்லெட்டுகளும் - அவை அருகே தான்.’ -

சிறுவன் கடையின் உட்பகுதிக்குள்ளே மறைந்தான். திரும் பவும் வந்தான். ‘கடவுளுக்குப் பொதுவாகவும், மூன்று. காட்சிகள் அறியவும் நான் சொல்கிறேன், மிஸ்டர் ஜிம்மி. நான் உயரே பார்த்தேன். கீழே பார்த்தேன். ஆனால் பத்துப்பென்னி ஆணியைக் காணவேயில்லை என்றான். -

முற்றத்துச் சாமான்கள், வயிறு கழுவி, மற்றச் சரக்குகள் அருகிலெல்லாம் பார்த்தாயா? இராணுவச் செருப்புகளையும் ஸார்டைன் மீன்களையும் வைத்துள்ள இடத்தில், உயரே தேடிஞயா ?” -

ஆமய்யா, நான் நெடுகத் தேடினேன். அவை அகப்பட வில்லை. ’

ஜிம்மி மாமா அசைந்தார் ; தலையைச் சொறிந்தார் ; புருவத்தை நெறித்தார். ‘ அது கொஞ்சம் இருந்தது எனக்குத் தெரியும். இரும்புச் சாமான்கள் விற்பவன் போன தடவை இந்தப் பக்கம் வந்தபோது நான் நிறையவே ஆர்டர் கொடுத்தேன். விருப்பமே ஆளுல் மெதுவாக என்ற ஒரு கப்பல் சாமான்கள் அன்றாெரு நாள் வந்தன. ’’ என்றார். -

திடீரென்று ஜிம்மி மாமா பெருஞ் சிரிப்பு சிரித்தார். தன் காலைத் தட்டினர். நான்தான் தமாஷ-க்கு ஆளானேன், பையா. அந்த ஆணிகளைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் இத்தனை நேரமும், அவை கிடக்கிற பீப்பாய் மேலேயே நான் உட் கார்ந்திருக்கிறேன். பையா, நீ திரும்பவும் நாளைக்கு வாயேன்.'” என்று சொல்லி, அவர் மீண்டும் தன் கண்களை மூடினுர்,

எவ்வாருயினும், அது ஜிம்மி மாமாவைப் பற்றி மற்றவர்கள் சொன்னதுதான். வியாபர்ரத்தில் தனக்கு வேண்டிய பொருளைத் தானே எடுத்துக் கொள்ளும் முறையை அவர் தான் முதன்முதலில் புகுத்தினர் என்றும் சொன்னர்கள். இந்த முறை பின்னர் வெகு பிரபலமாகிவிட்டது. ஆயினும் அவர் ரொக்க வியாபாரத்தில் நம்பிக்கை வைத்ததில்லை. எப்போதாவது எண்ணிக் கொண்டால், அவர் அடிக்கடி பில் அனுப்புவார். பில் பணத்தைச் செலுத்து வதற்குச் சிறுவர்கள் வந்தால், பல்லே உடைக்கும் மிட்டாய் பெர்ட்டலம் அல்லது, வயிறு கழுவி என்று அவர் குறிப்பிடும், திகட்டக் கூடிய அளவு இனிப்பு கொண்ட குடிவகைகளை தாராள மாய்த் தருவார். கடையில் ஒவ்வொன்றும் எங்கே உள்ளது

சிறுவுன் மறைந்தான். மீண்டும் வந்தான். அவை அங்கே