பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தாத்தாவும் பேரனும்

என்பது எனக்குத் தெரியும், அதனல், தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, மொத்த விலையை ஒரு காகிதப் பையில் கட்டைப் பென்சிலால் எழுதி விட்டு, இளஞ் சிவப்பு வரை களுடைய மிட்டாய் ஒன்ற்ை அமுக்கியவாறு, வெளியேறினேன். ஜிம்மி மாமா விட்ைகொடுப்பது போல் உறுமிஞரே தவிர, கண்களைத் திறக்கவேயில்லை.

நான் வீடு நோக்கி முக்கால்வாசி தூரம் நடந்ததும், தாத்தா காரில் ஏறி எனக்கு எதிரே வரக்கண்டேன். உள்ளே தாவு. அவர்கள் எல்லோரும் மாடியைச் சுத்தம் செய்கிறார்கள். அவர் களுக்குத் தெரியாதபடி நான் நழுவி விட்டேன், ஒடிப் போகலாம் வா. ஒரு குறிப்பு எழுதி முற்றத்து விளக்கின் மேல் வைத்திருக் கிறேன் என்று அவர் சொன்னர்.

சிப்பி ரஸ்தா மீது உற்சாகமாகத் துள்ளி காஸ்வெல் நோக்கி ஒடினுேம், ஒடை அருகே வந்ததும், மீன் தொழிற்சாலையின் நாற்றத்தை உணர முடிந்தது. முற்றிய மீன்களின் துளசி நாற்றம், அழுகிய சதுப்பின் காட்டமான வாசனை மாதிரியே, நாசிகளுக்கு இனிதாகவேயிருந்தது. அசைந்தாடும் சதுப்புப் புல்களுக்கு உயரே செஞ்சிறகுக் கரும்பறவைகள் மிதந்தன. சற்றுத் தொலைவில் மீன் பருந்து ஒன்று இரைதேடி வட்டமிட்டது. சூரியன் பிரகாச மாய் ஒளி வீசியது. தாத்தா பல்லைக் காட்டினர். ஜிம்மி எப்படி இருந்தார் ?’ என்றார்.

வழக்கம் போல்தான். நான் அவரைப் பார்த்தேன். ஆவ்வளவுதான். என்னுள் காடி நிறைந்தது போலாயிற்று. இப்பொழுது உழைக்கும் உணர்வு பிறந்துவிட்டது.’

‘ எனக்கும் கூடத்தான். ஆனல் நான் இன்று காலையில் புதுச் சக்தி பெறவில்லை என்றால் இந்த உணர்வு அடைந்திருக்க மாட்டேன் ‘ என்று தாத்தா சொன்னர். - சிறிய படகுப் பாலம் ஊசலிட்டு இணைந்து, ஒடை மீது நாங்கள் போவதற்கு வழி செய்யும் வரை, காத்து நின்றாேம். எங்களுக்கு விசேஷ அவசரம் எதுவுமில்லை. தாத்தா மறுபடியும் தன் தொப்பியைக் கண்கள் மீது இழுத்து விட்டிருப்பதைக் கவனித்தேன். அவர் விட்ட மூச்சு-அல்லது மென் காற்றாகவும் இருக்கலாம்-அவர் மீசையைத் துடிக்கவைத்தது.

இன்று, வெளித் தோட்டத்தில் ஈலிச் சேரில் சும்மா அமர்ந் துள்ள என்னைப் பார்க்கும் பலருக்கும், நான் உண்மையில் சோம்பி யிருக்க வில்லை என்பதைப் புரிந்து கொள்ளும் திறமையில்லை. தாத்தா சொன்னதைத் தான் நான் செய்கிறேன். சென்றதி மீட்சி பெற்று, இனி வருவதற்காகச் சேமித்து வைக்

நன. o