பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



1

கோடையின் இன்பம்

ஜூன் மாதம் வருஷத்தின் இனிய காலம் ஆகும். ஏனெனில் பள்ளிக்கூடம் மூடப்பெறுகிறது. உண்மையான உஷ்ணம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. காலை நேரங்கள் புத்திளமையோடு பனிமய மாய்த் திகழ்கின்றன. எல்லாம் பசுமையாயும் இனிய மனத்தோடும் உள்ளன. பொதுவாகக் கொசுக்கள் தோன்றவில்லை. இரவு வேளே கள் போர்த்துக் கொள்ள வசதியானபடி குளிர்ந்தே இருக்கின்றன. ஜூன் மாதம் பற்றிய மிக இனிய விஷயம் இது தான் : பள்ளியின் பயங்கர நினைவுகள் பின்தங்கி விடுகின்றன. செப்டம்பரோ வெகு தொலைவில் இருப்பதால் அதைக் கணக்கில் சேர்க்க வேண்டிய தில்லை. கோடைக் காலம் பையன்களுக்குச் சொந்தம் பெரிய வர்கள் கடற்கரைகளிலும் கிராமச் சங்கங்களிலும் விளையாடலாம்: விடுமுறைகள் எடுக்கலாம். எனினும் கோடை உண்மையில் சிறுவர்களுக்கே உரியதாகும். அது சூடு பெறும் காலம். சொறி சிரங்கும், விஷ ஜவியும் பரவும் காலம் வெறும் காலுடன் திரியும் காலம். தூண்டில் முள் காதிலே மாட்டிக் கொள்ளும் காலம். பேஸ் பாலின் காலம். விப்பூர்வில் பறவைகளும், அந்தி வேளையில் தடி வெளவால்களும் சுற்றும் காலம்.

கோடைக் காலம் நலங்கள் பல பெற்றிருப்பதால் பெரும்பா லோருக்கு சட்ட விரோதமானதாக ஆக்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. வயிற்றுவலி தரக்கூடிய அளவுக்குச் சகல வித அற்புதப் பொருள்களும் நமக்குக் கிட்டும்-பீச் பீயர், ரேஸ்ட் பெர்ரி-ஸ்ட்ரா பெர்ரி போன்ற காட்டுப் ப்ெர்சிகளும், சாதா பெர்ரி களும், பெரிய கருநீலப் பிளம், மஞ்சளும் இளஞ்சிவப்புமான பிளம், அத்திப் பழங்கள், பெரிய குளுமையான பசிய முலாம் பழங்கள், புலிக்கோடுகள் பெற்ற முலாம் பழம். வசந்த வீட்டிலுள்ள பச்சைத் தண்ணீரிலிருந்து இதை எடுத்து, அப்படியே முகத்தைப் பதித்து, சிறிது சிறிதாகச் சுவைப்போம். இறுதியில், கோடை தேய்ந்து, இலையுதிர் காலம் வந்து தட்டுவது போல், காற்றிலே சிறு புகை மணம் நிலவத் தொடங்குகையில், திராட்சைப் பழங்கள் வரும். பெரிய, சதைப்பற்றுள்ள, ரசம் துளும்புகிற, ஸ்கூப்பர்நங் திராட்சைகள். திகட்டும் இனிமை பெற்ற வெள்ளே ரகமும், கோல்ப் பந்துகள் போல் பெரிதான, சிறிது புளிப்பு உடைய கறுப்பு ரகமும் உண்டு.

எங்கள் ஊரில் ஜூன் மாதத்தில் ஒழுங்கான பள்ளிக்கூடத்தை பும், ஞாயிற்றுப் பள்ளியையும் மூடிவிடுவார்கள். இது எனக்கு இமிகுதியும் பிடித்தமானது. ஞாயிற்றுப் பள்ளியில் நான் கற்ற