பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடையின் இன்பம் #gg

செய்யும்படி வற்புறுத்தப் படுவேன். உபதேசங்களைப் பொறுத்த, மட்டில் தாத்தா அடிக்கடி மாறுபடக் கூடியவர்தான்.

நீ என்ன செய்யப் போகிறாய் ?’ என்று கேட்டேன். - * நாம் சும்மா மீன் பிடிக்கப் போகிருேம் ‘ என்று அவர் உற்சாகமாகச் சொன்னர், * .

அவமரியாதை செய்ததற்காக ஒரு பையனைத் தண்டிக்கும் முறை அவனே மீன் பிடிக்க அழைத்துப் போவது அல்ல என்பது நிச்சயம் ; எனவே இதில் எங்கோ சூது இருக்கிறது என்று நினைத் தேன். வகையாக விளையாடும் விதத்தை நான் தாத்தாவிட மிருந்து கற்றிருந்தேன். அதனுல், நான் சொன்னதெல்லாம். * எந்தவித மீன் பிடிப்பு ?’ என்பதே.

நல்ல தண்ணிரில் உள்ளவற்றைத்தான். முதிர்ந்து ெ தான பாஸ் மீன் ஒன்றையோ, அல்லது கொஞ்சம் பிரிம் மீன் களையோ பிடிக்கலாம். நாம் காரில் போவோம். பெரிய ஒடை. யில் எனக்குத் தெரிந்த ஆள் ஒருவன் உண்டு. அவனிடம் படகு. வாடகைக்கு எடுப்போம். நான் போய் தூண்டில்களே எடுத்து வரும்வரை காத்திரு. அந்த நேரத்தில் நீ, அழுகிப்போன மரக் கட்டைகள் சிலவற்றை உருட்டு. ஒரு டப்பா நிறையப் புழுக்கள் சேகரிப்பதில் உன் அபாரத் திறமையைக் காட்டு ’ என்று தாத்தா

பசுக்கள் நிற்குமிடம் போனேன் நான். அதற்குப் பின்ஞன் தணிவான சகதிச் சதுப்பு ஒன்று உண்டு. அங்கு பன்றிகள் கிடக்கும் ; காடைகள் நீர் குடிக்க வரும். அங்கிருந்த மோசமான கட்டைகள் சிலவற்றைப் புரட்டி, ஒரு பெரிய வர்ண டப்பா நிறையப் புழுக்களைச் சேர்த்தேன். நேர்த்தியான கொழுத்த புழுக்கள் டப்பாவில் நான் போட்டிருந்த ஈரச் சேற்றில் ஆன்ந்த மாய் நெளிந்தன. நான் வீடு வந்தபோது, இரண்டு இலேசான மூங்கில் துண்டில்களைத் தாத்தா எடுத்து வைத்திருந்தார். அவற்றை அதுவரை நான் பார்த்ததேயில்லே. *R

இவை எங்கிருந்து வந்தன ?’ என்று நான் கேட்டேன். ஒ, ரொம்ப காலமாக அவை என்னிடம் இருக்கின்றன. உனக்குத் தெரியாத எவ்வளவோ பொருள்கள் என்னிடம் உள்ளன. சந்திக்கிற ஒவ்வொரு சின்னப் பயலையும் எனது அந்தரங்கத்துக் குரியவனாகக் கருதுபவன் நானல்ல. நான் பேசா மலே வைத்துள்ள ரகசியங்கள் மிகப் பல. இத் தூண்டில்கள் என் ரகசியங்களில் ஒன்றுதான். இக் கடற்கரையில் நல்ல தண்ணீர் மீன் பிடிப்பு சிறு பெண் வேலையாகக் கருதப்படுகிறது-சிறு பெண் பண்பு அல்லது கேவலம் வெட்டி வீணனின் குணமாக மதிக்கப் படும்’ என்றார் அவர். வெட்டி வீணன் என்பவன் பெர்ச் மீனையும், பூனை மீனையும் கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்ற: வேண்டிய நிலையிலுள்ள சோம்பல் மிக்க அற்பன் ஆவன். . நான் காரை முடுக்கினேன். பேரோசையோடு நாங்கள்