பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

த வீட்டுக்குப் பின்புறமாக நாங்கள் நடந்தோம், அது தி சீர் மாதத்தின் இனிய நாள். சூரியன் கதகதப்பாக இருந்தது. காற்றும் கடுமையாக் இல்லை. இலைகளில் பொன்னிறமும் சிவப் பும் சிறிது தங்கியிருந்த்ன இன்னும், நாங்கள் ஒரு வேலியை அணுகிளுேம். முள் கம்பியர்லான் தணிந்த வேலி அது. நான் ஒரு கையால் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்து, மறு கையால் இசைப் பற்றிக்கொண்டு, வேலி மீது ஏறினேன். பாதி உயரம் போயிருப்பேன். அதற்குள் முள்கம்பி என் கால்சட்டை நடுவில் குத்திப் பற்றிக் கொண்டது. தாத்தா கூச்சலிட்டார். -

  • நில்லு காற்றில் ஆடும் துப்பாக்கியோடு, ஒரு பாதம் வெளி யிலும் மறு பாதம் கம்பியிலுமாக, வேலியில் சிக்கித் தவிக்கும் நீ :eடத்தனமாகக் காட்சி தருகிறாய், இல்லையா ? என்றார் அவர்.

அப்படித் தான் நானும் நினைக்கிறேன் என்றேன். * அதற்காக நான் உன்னை நன்றாகக் கோபித்துக் குறை கூறு வேன். நீ தவறு செய்தால் உனக்குச் சரியானபடி கொடுப்பேன். நீ இன்னும் துப்பாக்கியைக் கெட்டிக்கவில்லை என்பது தெரியும். நீ துப்பாக்கியும் கையுமாக வேலி ஏறத் துணிந்ததால் தவறு ஏற் பட்டால் கூட யாரும் சுடப்பெற மாட்டார்கள் என்பதையும் அறிவேன். ஆனால் அதையே நீ பழக்கமாக்கிக் கொண்டால், என்றாவது ஒருநாள் கெட்டித்த துப்பாக்கியுடன் ஏறுவாய் ; உன் கால் சறுக்கும்; துப்பாக்கியின் விசை கம்பியில் மாட்டி இழுபட்டு, மருந்து வெடிக்கும். அது உன்னை அல்லது என்னே அல்லது வேறு காரையாவது சுட்டு விடும். அப்புறம் ஒருத்தப்பட நேரமிராது.

காடுகளையும் வயல்களையும் சுற்றி அநேக வேவிகள் உள்ளன. இனி உன் வாழ்வு முழுவதும் நீ வேலிகளைத் தாண்டிக் கொண்டிருப் பாய். இப்பொழுதிலிருந்தே அதைச் சரியாகச் செய்யத் துவங்கு வது நல்லது. வேலி ஏறும்போது, துப்பாக்கியைத் தரையில் படுக் கப்போடு. நீ எந்த இடத்தில் ஏற விரும்புகிருயோ அதற்குப் பத்து அடி தள்ளி, வேலிக்குக் கீழே அதைப் பாதுகாப்பு மூடியோடு வை. நீ எப்பக்கம் போகிருயோ அதற்கு எதிர்திசை நோக்கி இருக் கட்டும் அதன் வாய். வேலியைத் தாண்டிய பிறகு நீ திரும்பிப் போய் துப்பாக்கியை எடுத்து, மூடி சரியாக இருக்கிறதா என்று கவனி. இதை நீ ஒரு வழக்கமாகக் கொள்க. அடிக்கடி பார்த்து மூடி பத்திரமாக மாட்டப்பட்டுள்ளதா என்று கவனிப்பதால் நஷ் டம் எதுவும் ஏற்படாது ‘ என்று சொல்வி முடித்தார் அவர்.

வயலின் மூலையை அடையும் வரை நாங்கள் நேரே நடந் தோம். கிழ ஸேன்டி-லேசான மஞ்சளும் வெண்மையும் படிந்த தாய்-காற்றை மோப்பம் பிடித்தவாறே வெளி ஒரத்தில் சுற்றியது. அதிக வயசும் மந்த குணமும் பெற்றுவிட்ட பிராங்க் சிரத்தையோடு தரையை_நாசியால் ஆராய்ந்து வந்தது. விரை வில் லேன்டிக்குச் செய்தி கிட்டவே, அது துள்ளிப்பாய்ந்து ஓடியது. வேகமாக ஒடியபோதே அது சடக்கென் நின்று, பெர்ரிச்செடிக்