பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

” தாத்தாவும் பேரனும்

திச்சயமாக இது ஒன்றும் மோசமானது அல்ல’’ என்று தாத்தர சொன்னுர். . . . - - - -

ஞாயிறு மீன் பிடிப்புக்காத நாங்கள் அதிக சிரமம் எடுத்ததே யில்லே. வேறு எவருக்கேனும் கார் தேவைப்பட்டால், நாங்கள் நடந்தே நீரருகே செல்வோம். நிறைய நண்டுகளைப் பிடித்துக் கொண்டு, துறையில் அமைதியாக உட்காருவோம். உளுத்துப் போன, சிப்பிக்கூடுகள் மண்டிய கம்பங்களைச் சுற்றியுள்ள நில்வறை னிலிருந்து ஆட்டுத்தலே மீன்கள் வெளிவருவதை நோக்கிக் காத்திருப்போம். ஆட்டுத்தலேயன்களை விடத் தவளை மீன்களே திகம் அகப்படும். ஆனல் அவ்வப்போது சிறு கறுப்பு மீன் வந்து அலுப்பைப் போக்கும். அடிக்கடி நாங்கள் படகை நீரில் தள்ளி, எங்களுக்குத் தெரிந்த வளைகளே நோக்கி சுமார் அரைமைல் துரம் செல்லோம். வழியில் சதுப்பிலே நின்று தூண்டில் இரைக்கு வேண்டிய இருல்களைப் பிடிப்போம். கத்தும் மீன்கள் சதர் கிடைக்கும். நோஞ்சான் மீன்கள் எப்போதாவது வந்து உற்சாக முட்டும். சில சமயங்களில் நாங்கள் சும்மா நண்டு விலையையும் பழைய இறைச்சியையும் எடுத்துக் கொண்டு, சிறு துறை வார்ாவூதி யருகே நண்டு பிடிக்கப் போவோம். அல்லது, இருட் டிய பிறகு, அலே_அதிகமில்லாதபோது, விளக்கும் திரிசூல்மும் கொண்டு படகில் சென்று விசித்திரத் தட்டை மீன்களைக் குத்தி எடுப்போம். கார் வேறு எவருக்காவது பயன்படாதிருந்தால், நாங்கள் அதிலேறி நல்ல தண்ணீர் ஓடைக்குச் செல்வோம் ; மாலை குளிர்ந்ததும் பெருவாய் பாஸ் மீன்களைப் பிடிக்க முயல்வோம்.

இல்லை; கோடை காலத்தில் செய்வதற்கு அதிகமாக எதுவுமில்லை தான். ஆளுல் நாம் அறிவதற்குள் செப்டம்பர் வந்து விடும். பெரிய உப்பு நீர் மீன்கள் ஒடத் துவங்கும். நிலவில் பொங்கும் பேரலேகளும், வடக்கிலிருந்து வரும் முதல் பெருங்காற்றும் சதுப்பு நில வாத்து வேட்டைக்கு வழி செய்யும். அப்புறம் ப்ள்ளிக்கட் தேனேயும், பாதரட்சைகளின் வலியும் ஏற்படும். வெகு விரை விலேயே உறைபனி பெர்சிம்மன் மரங்களை ஒலியெழ_அசைக்கும். இரவில் வேட்டை நாய்கள் காட்டில் ஒடத் தொடங்கும். காடையும் கிறிஸ்துமஸும் சிறிது நெருங்கி விந்திருக்கும்.

கோடைகாலம் பையன்களுக்கே உரியது; பெரியவர்கள் விலகி நிற்க வேண்டியது தான் என்று தாத்தா புன்முறுை சொல்லியிருந்த போதிலும், அவரைப்பற்றிய_பூரண நினைப்பு இல்லாமல் நான் கோடைகாலப் பாடலே இன்று கூடக் கேட்க முடிவதில்லை. தாத்து, ஆவரது வாழ்வில் பெரும் பகுதி நாட்களில்,'பிெத் வளர்ந்துவிட்ட பையனுகவே தன்னை மிதித்து வந்ததாக நான் கருதினேன். -- “ -