பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பா கீதம்-2 -

புருவுக்கு முன் சுமார் இருபது அடி தூரத்தில் குறி வைத்துச் சுடு : துப்பாக்கியை விலக்கி விட்டு, பிரார்த்தனை செய். ஏதாவது விழுந்தாலும் விழலாம்.’

நாங்கள் ஒருவாறு பண்ணையை அடைந்தோம். அங்கே நன்கு சுத்தம் செய்யப்பட்ட மணல்மய முன் முற்றத்தில், சைன பெரி மரத்தின் கீழ், இருபது இருபத்தைந்து பேர் புகைக் குழாயை உறிஞ்சியபடியும், புகையிலேயைச் சுவைத்தவாறும், சிந்தனையோடு எச்சிலேத் துப்பிக் கொண்டும் நின்றார்கள். எல்லோரும் துப்பாக்கி வைத்திருந்தார்கள். அவற்றில் அநேகம் துருப்பிடித்த பழைய குழல்கள் தான். ஒரு சில கம்பி சுற்றப்பட்ட ஒற்றைக் குழில் துப்பாக்கிகள். பொதுவான ஒரு களி வெறியும், முன்பே எனக்குப் பழக்கமான, நொறுக்குண்ட தானிய நறுமணமும் அங்கு

தாத்தாவைக் கண்டதும் அனைவரும் உற்சாகத்தோடு

• ஹல்லோ கூவினர்; என்னிடம் சிறிது தமாஷ் செய்தனர். இந்தப் பையளுேடு ஒரே இடத்தில் நின்று சுடுவதால் அபாயம் ஒன்றுமில்லையே?’ இவன் எல்லாப் பறவைகளையும் சுட்டு விடாமல் நமக்கும் கொஞ்சம் பாக்கி வைப்பான் அல்லவா ? அவன், சுமந்து நிற்பது சக்தி மிகுந்த பன்றிக் கால் போல் தோன்றுகிறது, இல்லையா ?’’-இப்படி ஏதாவது சொன்னர்கள். உடனேயே, நீலக் கால்சட்டை படிந்த தங்கள் தொடைகளில் தட்டிக் கொண்டு, பெரிதாகச் சிரித்தார்கள். புரு வேட்டையின் ஆரம்ப நாள் கூட-புதுமனை புகுதல், கரும்பை ஆலையில் இடுவது, பெண்கள் கூடி மெத்தை விரிப்பு தைப்பது போல்-ஒருவகை சமூக விருந்தே யாகும். - -

தாத்தா என் கழுத்தில் ஒரு கை வைத்து, இந்தப் பையனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதில் பிடிப்பு ஏற்பட்ட உடனே அவன் உங்கள் எல்லோர் கண்களையும் துடைத்துவிடுவான். நான் வந்தாயிற்று. எதற்காகக் காத்து நிற்கிருேம் ? புருக்களைச் சுடப் போகலாமே ‘ என்றார்.

சோளத்தாள்கள் மட்டுமே நின்ற வயலில் நாங்கள் சிரமத் தோடு நடக்கத் தொடங்கிய ப்ோது பிற்பகலில் மணி நான்கு ஆயிற்று. அது ஒரு மைல் அகலமும், இரண்டு மைல் நீளமும் கொண்ட ப்ெரிய சோள வயல். என் 15 கேஜ் துப்பாக்கிக்காக நான் இரண்டு பெட்டி குண்டுகள் வைத்திருந்தேன். அவ்வளவு தேவைப்படும் என்று தாத்தா சொன்னர். காக்கர் நாய், தான் செய்வது என்னதென உண்ர்ந்தது போல், எங்கள் பின்னலேயே நடந்தது. - W. . வய்லின் தூரத்து மூலை ஒன்றை நாங்கள் அடைந்தோம். பெரிய ஹிக்கரி மரம் ஒன்ன்ற தாத்தா சுட்டிக்காட்டினர். அதனடியில் பெரிய் டாக்பென்னல் செடிகள் சில நின்றன. “இங்கேயே உட்கார்ந்து கவனி. நான் இன்று அதிகம் சுடப்