பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, தாத்தாவும் பேரனும்

மேலெழும். அவற்றை-முக்கியமாக அவை அடர்ந்த புல்லிடையே இருந்தால்-நாய்கள் மோப்பம் பிடிக்காமலே விட்டிருக்கும். பெரும்பாலும் அப்பறவைகள் மீண்டும் ஒரே கூட்டமாக அல்லது இரு பகுதிகளாகச் சேர்ந்து விடும். நெருக்கமற்ற மறைப்பில் இவை பதுங்கியிருக்குமானல், சீக்கிரம் கலேந்து ஒடும். அவற்றுக்கு தாம் போதிய அவகாசம் அளித்தால், அவை நல்ல மறைவிடம் தேடி ஓடும் அதன் மூலம் நாய்கள் பின்பற்றுவதற்கு வசதியாகப் பூரண வாடை விட்டுச் செல்லும். நமக்கும் உறுதியான குறியும் நல்ல வேட்டையும் கிட்டும்.

பத்துப் பதினேந்து நிமிஷங்கள் அவற்றைச் சும்மா விட்டிருப்போமானுல், நாம் மறுபடியும் அவற்றை வேட்டை பாடச் செல்கையில், நம் நாய்கள் இங்கொரு பறவையை, அங்கே ஒன்றை, இவ்விடம் இரண்டை, சுட்டிக் காட்டும். துப்பாக்கிகள் வெடிதீர்க்கும் வேளையில் கூட, ஒவ்வொரு பறவையும் தரையைப் பலமாகப் பற்றியபடி காட்சி தரும், தாத்தா தனிப் பறவைகளே வேட்டையாடிய முறையின்படி, தாங்கள் பறவைக் கூட்டம் பூராவையும் ஒழித்துக்கட்டியிருக்க முடியும். ஆனல் ஒரு கூட்டத்தில், ஒரே தடவையில், மூன்று அல்லது தான்கு பறவைகளுக்கு அதிகமாகச் சுடுவதைத் தாத்தா ஆதரித்ததில்லை.

ஒரு மாரிக்காலத்தில் நான் உட்கார்ந்து, எங்கள் இருவருக்கும் கிட்ைத்த பறவைகளின் சராசரி விகிதத்தைக் கணக்கிட்டேன்.-- நாங்கள் சுட்ட பறவைகளைப் பற்றி எப்போதும் துல்லியமான W. வைத்திருந்தோம். வருஷ முடிவில் வேட்டை புக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதும் வழக்கம்-ஒரு வேட்டையில் பதினேந்து பறவைகள் சுடலாம் என்று எல்லை

குத்திருந்தோம். சராசரிக் கணக்கில், ஒரு வேட்டை நாளில்

இரண்டு துப்பாக்கிகளுக்கும் இருபத்தொரு பறவைகள் வந்தன. நான் ஏகப்பட்ட பறவைகளைத் தவறவிட்டிருந்தேன். ஒரு வேட்டைக்கு எட்டுப் பறவைகள் என்ற சராசரியில் நர்ன் சுட்டிருத்தேன். அப்படிப் பார்க்கையில், மழை, பனி, உலர்ந்த மூக்கும் வியாதியும் பெற்ற நாய்கள், வெறும் அதிர்ஷ்டம் கெட்ட நாட்கள் இவற்றை எல்லாம் தள்ளிவிட்டால், ஆளுக்குப் பதினைந்து பறவைகள் என்ற விகிதத்தில் சுடுவதற்கு நர்ங்கள் ஏகப்பட்ட தினங்கள் வேட்டையாடி இருக்கவேண்டும் என்று இதிங்கீட்-ேது.

இதில் முக்கியமான விஷயம், உண்மையான சுடுதல்களுக் கிடையே எங்களுக்கு இனிய நேரம் நிறையவே கிடைத்தது என்பது தான். குறித்த அளவு பூராவும், அல்லது ஏகதேசம் அந்த அளவு, சுடுவதற்குப் பிற்பகல் முழுவதும் எங்களுக்குத் தேவைப்பட்டது என்று வைத்துக்கொண்டர்ல்? எங்களுக்குக் காட்டில் அதே அளவு நேரம் மிகுதியாய் கிடைத்தது. ஒருவன் மெதுவாகவும்