பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

நம்மில் ஒருவர் விரைவிலேயே அதைக் கண்டுவிடுவோம் ‘ என்று தாத்தா சொன்ஞர்.

மரத்தில் நில்ைத்த அணிலைச் சுடுவது மிக எளிது. அவற்றைக் கண்டுபிடிக்கத் தெரிந்துகொள்ள வேணும். அவ்வளவுதான். ஒரு மரத்துக்கு இரண்டு பேர் தேவை. அடிமரத்தோடு அப்பிக் கொண்டோ, கவடு ஒன்றில் உட்கார்ந்தோ, அல்லது ஒரு கிளே மீது நீண்டு கிடந்தோ கவனிக்கிற அணில், தன் பக்கத்தில் உள்ள வேட்டைக்காரனை உணர்ந்ததும் அங்கிருந்து விலகி நகரும். அப்பொழுதுதான் மறுபக்கம் நிற்பவன் அதைச் சுடவேண்டும்.

அடிமரத்தைச் சுற்றி எச்சரிக்கையோடு எட்டிப்பார்த்த ஒரு தலையை நான் வெகு சீக்கிரமே கண்டேன். சாம்பல் நிற உடல் ஒன்று, தட்டையாய் ஒட்டியபடி, என் பக்கமாக நகர்ந்தது. என் சிறு துப்பாக்கி ஒலித்தது மீண்டும். உடனே அது கீழே விழுந்தது. ஜேக்கி அருகே விரைந்தது. கழுத்தின் பின்புறம் கவ்வி அதை எடுத்தது. வேகமாய்த் திருகி அதன் கழுத்தை முறித்தது. பிறகு அதைத் தரையில் போட்டது. தன்னையே மெச்சிக்கொள்ளும் குரைப்பு ஒன்றை எழுப்பிவிட்டு, விலகி ஓடியது. -

சுமார் பதிளுேரு மணி வரை இப்படி நிகழ்ந்தது. மேலும் இரு டஜன் அணில்களை ஜேக்கி மடக்கியிருக்கும் என்று கருது கிறேன். அவற்றில் பல பூனை இனம். ஆறேழு நரி இனமும் இருந்தன. இன்னொரு ப்ையில் அவற்றை நிரப்பிளுேம். அது வெகு கனமாக இருந்ததால், அதன் விளிம்பில் உள்ள இரு துவாரங்களினூடே தாத்தா ஒரு கம்பைச் சொருகிஞர். நாங்கள் இருவரும் அதைச் சுமந்தோம்.

ஏப்னர் வீட்டை நாங்கள் சேர்ந்ததும், சுத்தமான வெண் மணல் பரவிய முற்றத்தில் தாத்தா முதல் பையைக் கொட்டினர். ஏப்னரின் விசால்மான், பிளம் கறுப்பு முகம், பெரிய சிவிப்பு: முலாம்பழம் போல், சிரிப்பால் வெடித்தது.

‘ஐயா, இது நிச்சயமான அணில் வேட்டைதான். அந்தச் சாக்கிலே என்ன இருக்கிறது ?” என்று ஏப்னர் கேட்டார்.

அணில்கள்தான். இந்தப் பதினைந்தும் உமக்கு ‘ என்று. தாத்தா சொன்னர். -

‘’ முதலாளி ஐயா, இது வலுத்த சிநேகம். எங்கள் வீட்டில் கொஞ்சம் கறி சாப்பிடமுடியும். நான் கணக் கெடுக்கிறபோதெல் இாம, புதுசாக ஒரு நபர் எங்களிடையே வந்திருப்பது போல் தோன்றுகிறது. பன்றி இறைச்சி விலையோ மிக உயர்ந்துவிட்டது. ஆகும் ஒரு நல்ல காரியம் செய்வோம். அந்தச் சாக்கில் இருப்பதை இரண்டு பேர் சுத்தம் செய்யமுடியாது. நான் எனது பெரிய r அழைத்து, அவற்றை இப்பவே இங்கேயே சுத்தப் படுத்தச் சொல்வேன். ஏ குழந்தைகளே, கேப்டனுக்கும் எனக் கும் உதவிசெய்ய வாருங்கள்’ என்று ஏப்னர் சொன்னர்.