பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கூடமும் அக்டோபரும்

கிடைத்தன. அவற்றைத் தெளிந்த நீரில் அமுக்கிச் சுழற்றி

படகினுள் போட்டதும் அவை ரத்தினங்கள் போல் மின்னின்.

கடலின் விளைவுகள் ஒழுங்கான சிப்பிக்கூடத்துக்கு எடுத்துக்

செல்லப்படும். கூடம் என்பது ஒரு சாய்ப்பு ; அதன் கீழ் மரச்

:

ாம்

t

சட்டங்கள் மீது அமைந்த கரடுமுரடான மேஜை ஒன்று !

• * .3 - - .. - ஆசனத்திலிருந்து சாமான்களின் பெட்டிகள் ஈருக எது

வேனும் மதிக்கத் தகுந்த நாற்காலிகள் ஆகியள்ைதான். எண்ணெய் விளக்குகள் ஒளி உதவின. கெளரவமான சிப்பிப்புழு பொரிக்கும் பணி எதுவும் பகல் வேளையில் நிகழ்வதில்லே என்பதைக் கூற மறந்துவிட்டேன். பகலில் குடிப்பது மரியாதை

யாகக் கருதப்படவில்லை. திருநாள் கொண்டாடுவோசில் கணிச மான பகுதியினர் சிப்பிகளையும், தானிய மதுவையும் பிரிக்க முடியாதவையாகவே மதித்தனர்.

ஈரம் படிந்த பாசி போதுமானதே. ஆளுல் உண்மையான முதல் ரகச் சிப்பி சமைப்பவர், புதிதாகச் சேகரித்த கடல் பூண்டு களிலேயே தனது சிப்பிகளை அவிப்பார். இன்றைய திறந்த வெளிச் சமையல் அடுப்பை ஒருவாறு ஒத்திருந்தது அக்கால அடுப்பும். மூன்று பக்கங்களில் கல் அல்லது காங்ரீட். மேலே கனத்த தகரம், அல்லது முலாம் பூசிய இரும்பு. உலோகத் தகட்டின் கீழ் தீ மெது வாக எரியும். கடல் பூண்டுகளில் பொதிந்த சிப்பிகள், விளிம்புகள் தளரும் வரை, அவிக்கப்படும். அப்புறம், ஒரு கத்தியைச் சிப்பி யின் ஜவ்வு கிழிபடாதபடி அதனுள் புகுத்துவது சாத்தியமாகும். அதன் மணம் இன்னும் தெளிவாக எனக்கு நினைவிருக்கிறது. சிப்பிப் பொரியல் உப்பளச் சதுப்போடு நெருங்கிப் பிணைந்துள் ளது. சதுப்பு மணம், மிர்ட்டில் பூண்டு வாசனை, கடலோரப் பைன் வாடை எல்லாம் பொரியல் ஆவியோடு கலந்து விளங்கும். இப்பிச் சூப்பு அல்லது ஆமைக் குழம்பு, ஏதாவது ஒன்றுடன் நாம் திருப்தியுற வேணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரே சமயத்தில் நமக்கு இரண்டும் கிடைக்காது. இப்பி சூப்பு, வெகு எளிதானது. சூப்பில் ப்ாலோ தக்காளியோ கிடையாது. இப்பிச் சாறு, இப்பிகள், ஐரிஷ் உருளைக்கிழங்குத் துண்டுகள், வறுத்த முதுகுக் கொழுப்பு, வெங்காயம், உப்பு, மிளகு எல்லாம் கிடக்கும். இவை இளங்கொதியாய் கொதித்துத் திவ்வியமாய் இசைத் திருக்கும். சிப்பிப் புழுவை நினைத்து நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் ஆசை அடங்காது. பெண் களில் ஒருத்திதான் பொதுவாகச் சூப்பு தயாரிப்பது வழக்கீம். ஏனெனில் ஆண்கள் சிப்பிகளிலும், வெண் குடிவகை நிரம்பிய அரை காலன் பழ ஜாடிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். சிப்பிகள் தான் முக்கியத் திருப்பணி, சூப்பு உண்மையான விருந்துக்கு நம் வயிற்றைத் தயார்ப்படுத்தும் சாதனமே. இன்று சிப்பிகளை எப்படித் தின்கிறார்களோ, எனக்குக் கவலை இல்லை. அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. தாத்தா சில சமயங்களில்