பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தாத்தாவும் பேரனும்

கொஞ்சம் விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பறவைக் கூட்டத்தைக் கண்டேன். மிகவும் பெரிய கும்பல். எல்லாம். புதிய பறவைகள். முன்பு அவை ரஸ்தாவுக்கு அந்தப் பக்கத்தில், மரவெட்டு நடைபெறுகிற இடத்தில், இருந்திருக்கும். இப் பொழுது சத்தடி பொறுக்கமாட்டாமல், நம்மோடு வசிக்க வந்திருக்கலாம். கொஞ்சம் பொறுங்கள். இந்த வேலையை முடித்து விட்டு, நானே வந்து அதைக் காட்டுகிறேன் ‘ என்றார்.

நாங்கள் ஷெரீப் நாக்ஸ் பண்ணேயிலோ, அல்லது துணி வெளுக்கும் மேரி மில்லட் ஆத்தை நிலத்திலோ, எங்கு வேட்டை யாடினும் சரி, பறவைகளைக் கண்டுபிடிப்பதில் கால விரயம் செய்த்தில்லே. பறவைகள் இங்கே இல்லாவிட்டால், அங்கே இருந்தன. அவை இங்கு இல்லையெனில், அங்கு இருந்துதானுக வேண்டும். வருஷா வருஷம் அவற்றை நாங்கள் கண்டோம். பட்டாணி வயல் பறவைகள், சதுப்பு நிலப் பறவைகள், காட்டுப் பறவைகள் எல்லாம் இருந்தன. பைன் மர விளைச்சலைத் தின்ன அவை சிறிது சுற்றித் திரிந்தன. ஆயினும் வழக்கமாக அவை, ஓங்கி வளராத ஒக் மரத் தோப்பு, மரத்துரள் குவியல், கசப்பு பெரிப் புதர், காய்ந்த கிளேகள் இவற்றில் எதனருகிலாவதுதான் வசித்தன. -- *

இன்னுமொன்று எங்களுக்கு வேட்டையாட மாகாணம் முழுவதும்-பெரிய மாகாணம் அது-இருந்தது. ஒரே ஒரு பெரிய பண்ணைதான் விலக்கானது. மற்றவை எல்லாம் தாத்தாவுக்கும் எனக்கும் பிரத்தியேக வேட்டை நிலம் தான். இவ்வளவு அதிக மான வேட்டை நிலத்தை ஒரு கோடீஸ்வரன் கூடப் பெற்றிருக்க முடியாது எனும் விஷயம் ஒரு நாள் திடீரென்று எனக்குப்பட்டது. அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

ஆமாம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவ தாக, அந்நாட்களில் நாட்டு மக்கள் காடைகளிடம் சிரத்தை காட்டவில்லை. அவை சோளப் பயிர்களைப் பாழ்படுத்துவதை அவர்கள் கண்டுவிட்டால், அந்தக் கூட்டம் பூராவையும் ஒழித்து விடுவார்கள். கஷ்ட காலமாக இருந்து, வயிறு காய்ந்தால், சில பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பார்கள். மற்றப்படி அவர்கள் வெண்நிறக் காடைகள் விஷயத்தில் அக்கற்ை - கொண்டதேயில்லை. அவை உயிர் வாழ்வதற்கு வேண்டிய உதவி எதுவும் செய்ததுமில்லை. சிலபேர் அவற்றைக் கூட்டம் கூட்ட மாகக் கொன்று தள்ளியதை அவர்கள் தடுத்ததுமில்லை. அக் காலத்தில், லாபத்துக்காகச் சுடுவோர் பலர் இருந்தனர். அவர்கள் ஒரு பறவைக் கூட்டத்தை, பறவைகள் துடைப்பப் புல்களுக் கிடையே வசமாகச் சிதறியிருந்தால், ஒரே நாளில் கொன்று தீர்த்து விடுவர். .

தாத்தா, எப்பொழுதும், வெகுவாகச் சுற்றித் திரிபவர்தான். அம்மாகாணத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரை அறிவர்.