பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஜேணத்தை மினுமினுப்பாக்க வேனும் : துப்பட்டிகளைக் காற். முட்ச் செய்தல் வேண்டும். அதற்குப் புது வைக்கோல் தேவை. அது மலேயளவு வைக்கோலும் ஒட் தானியமும் தின்னும். அதை நீ கடுமையாக ஒடச் செய்த பிறகு, அது குளிர்ச்சி பெறுவதற்காக அதை உலாவ விடவேண்டும். அதன் குளம்புகளைக் கவனித்து, அதைக் கருமானிடம் இட்டுச் செல்ல வேணும். உன்னிடம் ஒரு சைக்கிள் இருக்கிறது. அப்புறம் குதிரை எதற்காக ?’ என்று: தாத்தா சொன்னர்.

ஒவ்வொரு பையனும் அவசியம் ஒரு நாய் வைத்திருக்க வேண்டும் என்பது போலவே, ஒவ்வொரு பையனும் அவசியம் ஒரு குதிரை வைத்திருக்க வேணும்: இப்படி ஏதோ முணுமுணுத்தேன். தாத்தா சீறிஞர். ஒவ்வொரு பையனும் அவசியம் ஒரு கார் வைத்திருக்க வேண்டும் என்று வெகு சீக்கிரமே நான் அவருக்குச் சொல்லக்கூடும் , பிறகு ஒரு நாள், ஒவ்வொரு பையனும் ஒரு ஏரோப்ளேன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விவாதிப்பேன் என அவர் சொன்னுர்,

நான் ஒன்று சொல்கிறேன். ஒரு குதிரை வந்து, நிரூபிக் கப்படாத ஒரு திறமை மீது பென்னம் பெரிய முதலீடு செய்வதே யாகும். முதலில் உனக்காக ஒரு வெள்ளாடு வாங்கிப் பார்ப்போம். வெள்ளாட்டையும் வண்டியையும் நன்கு பராமரிக்கிற எவனும் ஒரு குதிரை பெற அருகதை உடையவன்தான். ஏனெனில், ஆண் வெள்ளாடு மாதிரி முரட்டுத்தனமான பிராணி வேறு எதுவுமில்லை, அது ஒன்று விற்பனைக்கு வந்திருப்பதை நான் அறிவேன். அது உண்மையாகவே அழகான வெள்ளாடு ; வெள்ளாடுகளை நீ விரும் புவதாளுல் அதோடு ஒரு வண்டியும் வாங்கிவிடுகிறேன். இழுவைச் சாமான்களே நான் தயாரிப்பேன் ‘ என்றார். -

பாக்ஸ்டவுன் என்ற இடத்துக்கு நாங்கள் போனுேம், அங்கு நீக்ரோவர் வசித்தனர். ஆல்பர்ட் கிரேயின் வீட்டுக்கு நாங்கள் சென்றாேம். தோட்டத்தில் வேலே செய்யும் பெரிய கறுப்பும் பையன் அவன். செய்ய வேண்டிய வேலைக்கு அதிகமாக உழையா திருப்பதற்காக அவன் எனக்கு வசீகரக் கதைகள் சொல்விான், ஆல்பர்ட்டின் அத்தை ஒரு வெள்ளாடு வைத்திருந்தாள். ஐந்து டாலர்களுக்கு விலைக்குக் கிடைக்கும்.

அது நிஜமாகவே நல்ல தோற்றமூடைய வெள்ளாடுதான், இளமை நிறைந்தது. மான் நிறத்தது. அதன் முதுகில் கறுப்புக் கோடு ஒன்றிருந்தது. குளம்புகள் சுத்தக் கறுப்பு. நெற்றியில் ஒரு வெள்ளே நட்சத்திரம் காணப்பட்டது. அதன் கொம்புகள் இன்னும் முற்றவில்லை வளைந்திருக்கவுமில்லை. அதன் முன் தலை பாறை போல் கடினமானது. நான் அதுவரை கண்டிருந்த எதையும் அல்லது எவரையும் விட மிக மோசமான குணம் பெற்றது. அது.

நாங்கள் பில்லியை வீட்டுக்கு இழுத்துச் சென்றாேம். வழியில் ஒவ்வொரு அங்குலமும் அது முரண்டியது. அது பாக்ஸ்டவுன