பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளாடும் நானும் #:

ஒரு நாளைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். அதன் பயிற்சியைத் துரிதப்படுத்த நான் விரும்பவில்லை. அதை மண்டும் பசுத் தொழுவுக்கு இழுத்துச் செல்வோம். நாளே மதுபடியும் முயற்சி செய்வோம். என்றார்.

மறுநாள் மீண்டும் முயன்றாேம். அன்றும் அதே கதை தான், இந்த வெள்ளாடு p என்றாலும் திரும்பாது ; ஹா என்றாலு, நகராது; தானுகப் போகாது; இழுத்தாலும் அசையாது ; ப. தால் எழாது ; நிற்க விரும்பினுல் படுக்கவே படுக்காது. சிது வேலி உடைய பசுத் தொழுவின் வாசல் வழியாக அது உள்ளே துழையாது. ஆகவே நான் அதை வேலிக்கு மேலாகத் துர்க்கி, எறிவதை வழக்கமாக்கினேன். .

நாங்கள்_மூன்று மாதம் அந்த வெள்ளாட்டோடு போராடி ளுேம். அது இம்ழியும் ஆசையவில்லை. அதை வாரில் கட்டுவதற்கும், அப்புறம் அதை வெளியேற்றுவதற்கும் நாங்கள் போராட வேண்டி யிருந்தது. அதைத் தொழுவத்திலிருந்து வெளியே கொண்டு வர, நாங்கள் அதைக் கீழே தள்ளிப் பிடிக்க நேர்ந்தது. அதனுடைய வேலை முடிந்ததும், மீனே விட்டெறிவது போல் அதையும் தூக்கித் தொழுவினுள் வீசுவோம். . -

அந்த ஆட்டைக்கொண்டு நான் சிறிது தூரம் கூடச் செல்ல வில்லை கொஞ்ச ஆனந்தமும் பெறவில்லை. பிறகு ஒரு நாள், ஆந்த ஆடு உண்மையான போர் வீரன் என்பதை நான் தற்செய லாகக் கண்டுபிடித்தேன். அது முட்டுவதற்கும், தின்ன திே: யாதது என்று கருதப்படுவதை எல்லாம் தின்னவும் ஆசைப் பட்டது. அதனிடம் இன்னொரு களங்கமும் உண்டு. அது சண்டை போட விரும்பியது. தனது பின் கால்கள் மீது எழுந்து, அது: தாக்கும். நான் அதைப் பற்றியதும் அது முறுக்கித் திரும்பி, என்னைக் கீழே தள்ளப் பெரிதும் முயற்சி செய்யும். சாப்பாட்டைத் தவிரச் சண்டை போடுவதில் மட்டுமே அதற்குச் சிரத்தை இருந்தது.

சிறிது காலத்திற்குப் பிறகு, சண்டை போடுவது சற்றே குறைந்தது, ஏனெனில், ஒரு பையன் சண்டையிட விரும்பினுல், அவன் மற்றாெரு பையனைத் தேடுவதே நல்லது. அது போக, என் தாய் எனது நாற்றம் பற்றிக் குறை கூற ஆரம்பித்தாள். இது, நாற்றம் உட்பட, பூரணமான ஆண் வெள்ளாடுதான்.

அதைச் சாந்தப்படுத்த, நான் எனக்குத் தெரிந்த அன்பு வழிகள் அனைத்தையும் முயன்றேன். பதிலுக்கு நான் பெற்றதெல்லாம் அதே மஞ்சள் மய ஆட்டு முழி தான். அதன் போவிப்புக்கும், தங்குமிடத்துக்கும் கொஞ்சம் கூட உழைக்க விரும்பாமல், நம்மை வெறுக்கிற ஒன்றுடன் வசிப்பதில் எவ்வித வேடிக்கையுமில்ஜல. முடிவில், பில்லியைக் காரில் ஏற்றி, மீண்டும் பாக்ஸ்டவுனில் கொண்டு சேர்த்தோம். தன்து பழைய வீட்டைக் கண்டவுட்னே,