பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தாத்தாவும் பேரனும்

மரங்களில் வசிக்கும் ஆவிகள் அங்கு இருந்தன் ; புராதன மான மரத்தைச் சுற்றிலும் வெகு விசேஷமான எதுவோ நில வியது; காலம் கடந்த வசந்தத்தில் விசித்திரமான வசிய சக்தி எதுவோ உண்டு; யுகம் யுகமாக மிருகங்கள், மனிதர் ஆகியோ ரது போக்கினுல் இது உறுதிப்படுத்தப் படுகிறது (இவ் விஷ் யத்தை பின்னர் நான் நூல்களிலிருந்து கற்றேன் என்ற இணர்வு எனக்கு ஏற்பட்டது. “ . . . ‘.

அந்தச் சமயத்தில், மலைகள் மீதுள்ள பையன்கள் முகாமுக்கு என்னே அனுப்புவது பற்றி, பெரியவர்களிடையே பேச்சு அடி வட்டது. அது விஷயமாக நானும் வேகமுற்றிருந்தேன். வசந்தம் மென்மையும் இனிமையும் ஏற்று, கோடைக்கு வரவு கூறத் தொடங்குவது வரையில்தான். தாத்தாவும் நானும் பசுத்தொழு வைக் கடந்து, மர்மம் நிறைந்த காட்டினுள்ளே தினசரி யாத் திரை போய் வந்தோம். மே மாதத்தில், முகாம் விஷயமான என் ஆர்வம் குறைந்துவிட்டது. ஜூன் மாதம், அந்த முகாம் ஒரு வாடிக்கைக்காரனே இழந்துவிட்டது. எனக்கு நன்மை ஏற் பட்டதை நான் அறிந்தேன். தான் நன்னிலையில் இருப்பதை ஒரு புத்திசாலி அறிந்து கொள்வான் ; அதை அவன் அறிந்தி ராத மற்றாென்றுக்கு மாற்றுவானேயாகில், முதல்ரக மடையனே யாவான் என்று தாத்தா அடிக்கடி சொல்லுவார். -

மேலும், அப்பொழுது நான் முகாமுக்குப் போகமுடியாத அளவு மிகுதியான அலுவல்களில் ஈடுபட்டிருந்தேன். பேஸ் பந்து விளையாட்டு, மற்றப் பையன்களோடு நீந்துவது இவை தவிர், தாத்தாவும் நானும் பல திட்டங்கள் போட்டிருந்தோம். கோடை கால மீன்பிடிப்புக்காகப் படகைச் சரிப்படுத்த வேண்டும். ஒரு நாய் குட்டி போடும் வேளை நெருங்கி விட்டது. வாத்துக்கள்ை வேட்டையாடப் பதுங்குமிடத்தில் கொஞ்சம் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆண் வெள்ளாட்டை அடக்கும் வேலையும் இருந்தது.-இந்த வேலையில் நாங்கள் தோல்வியுற்றாேம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்புஜிழ் மீன்பிடிப்பு இருக்கவே செய்தது. கருமீன், புள்ளி பெற் ஆறு மீன், கத்தும் மீன் ஆகியவற்றுக்கு உப்பு நீரிலும், லுக்காக நல்ல தண் iைரிலும் பாடுபட வேண்டும். டிப்பு முடிவதற்குள் செப்டம்பர் வந்துவிடும். அலைகள் தி எழும். உடனே, வெள்ளம் பாய்ந்த சதுப்பு நிலங்களி சையெழுப்பியபடி பறவைகள் தாவித் திரியும். -----

சதுப்பு நிலப் பறவைகளைத் மீன்கள் வந்து சேரும். நீல மீனையும்,