பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்ககிடையே வாழ்க்கை 197

கனவான் எவரிடமும் இழிவாகப் பேச மாட்டார். எவனுமில்லை. என்பதற்குப் பதில் எவனுே ஒருவன் ‘ என்று சொல்லும் எவனிடமும் கூடப் பேச மாட்டார். கனவான் பேராசைக்காரன் அல்ல. கனவான் வேறெவனது நாய்களைப் பார்த்தும் கூச்சலிட் மாட்டார். கனவான் போகிற போதே தன் கணக்கைத் தீர்த்து விடுவார். தான் திருப்பித் தர முடியாதது எதையும் அவர் எடுத்துக் கொள்வதில்லை. கடன் வாங்குவதாஞல், அவர் ப்ாங்கிலிருந்தே கடன் பெறுவார். தனது தொல்லைகளைக் கூறித் தன் நண்பர்களைத் தொல்லைப்படுத்த மாட்டார் அவர்.”

ஒரு கனவான் எப்படி அமைந்திருப்பார் என்பதை நாங்கள் முடிவுகட்டி விட்டதாகவே தோன்றியது. நான் எதுவும் பேச வில்லை.

வேட்டைக்காரன் என்றால் என்ன ? இதைத் தாத்தா என்னிடம் கேட்கவில்லை. தனக்குத் தானே நம்பிக்கைத் தீர் மானம் நிறைவேற்றிக் கொள்வதுபோல் அவர் தலையை ஆட்டிஞ்ர். * வேட்டைக்காரன்_முதலில் ஒரு கனவானே யாவன். ஆஞல், அடிப்படையில், மீனே, பறவையோ, மிருகமோ எதுவாயிலும், தனக்குத் தேவையானதை மட்டுமே, அல்லது, ஒரு விசேஷ் காரணத்திற்காகத் தனக்கு அவசியப்படுவதை, கொல்லுகிற ஒரு வன்தான் வேட்டையாளன் ஆவன். அதைக் கொல்லவேண்டும் என் பதற்காக அவன் எதுவொன்றையும் ஒருபோதும் கொல்வதில்லை. அவ்வப்போது ஒரு சிறிது என்று அவன் கொல்லுகிறவை நிரந்தர் மாக இருக்கும்படி பாதுகாக்க அவன் முயற்சிக்கிருன். இதையே பரிபாலிப்பு என்று புத்தகங்கள் கூறுகின்றன. சாதுவான காடைக் கூட்டம் பத்துப் பறவைகளுக்கும் குறைவானதாக ஆகிவிடும்படி நாம் சுட்டுக் கொல்லாததன் காரணமும் இதுவே ’ என்றார்.

இதை நான் புரிய முடிந்தது. அப் பறவைகளைக் கொண்டு தான் நாங்கள் நாய்க் குட்டிகளுக்குப் பயிற்சி அளித்தோம். அவை எக்காலத்தும் நிலைபெற்றிருந்தன.

நான் வேட்டைக்காரன் என்று குறிப்பிடத் தகுந்த கெட்ட மனிதன் ஒருவனே என்றுமே கண்டதில்லை. கனவானுக இல்லாத உண்மையான வேட்டையாளன் ஒருவனை நான் அறிந்ததுமில்லை. ஆகவே, நீ கனவாளுகவும் வேட்டையாளஞகவும் இருந்தால், கெட்டவளுக இருக்க முடியாது. இது தெளிவாக இருக்கிறதா ?” அப்படி அது இல்லை. ஆனால், இருக்கிறது என்றே நான் சொன்னேன். அது விவாதத்தைத் தவிர்க்கும் என்று தோன்றியது. தாத்தா மேலும் சொன்னர் : நான் நிரந்தரமாக வசிக்கப் போவதில்லை. ஆகவே, முன்பு பீவர் பிராணியைப் பிடிக்கச் சென்றவர்கள் தாம் போன பாதையைக் குறிப்பிட மரங்களைக் கொளுத்தியதுபோல, நானும் என் நினைவு உனக்கு இருக்கும்படி உன்மீது சில குறிகள் கீற விரும்புகிறேன். நான் பெரும்பேச்சுத் தொணப்பனக இருப்பதும் இதனுல்தான். இதுவரை நீ எவனேயும்