பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

குவதில் இக்கோடையின் ஒரு பகுதியை நாம் கழிக்கலாம் என்று தினத்தேன்.” -

ஒரு மரத்தின் உயரே ஏதோ சலசலப்புக் கேட்டது. நாங்கள்

பைன் இலைகள் மீது ஒசையின்றிக் கால் ஊன்றி அங்கே சென்றாேம். கரக்கிளைகளில் இரு அணில்கள் ஆனந்தமாக ஒன்றை ஒன்று துரத் திக்கொண்டிருந்தன. மரத்தடியில் நின்றவர்களே அவை கவனிக் கவேயில்லை. -

தில்’ என்று தாத்தா சொன்ஞர். காதலைப் பற்றியும், பொதுவாக எல்லாவற்றிலும் அதன் திய பயன்கள் எவ்வாறு படிகின்றன என்றும் நான் உனக்குச் சற்று விரிவாகவே கூறுவேன். மேலே உள்ள அணில்களில் ஒன்று பெண், ஒன்று ஆண். அவை காதல் புரியும் அணில்கள். ஏனெனில் காதலுக்கு உரிய காலம் இது. அவை துள்ளிக் குதிப்பதைக் கவனி. இலையுதிர் காலம் வந்ததும், ஒன்று மரத்தின் மறுபுறம் ஒட்டிக் கிடக்கும். மற்றது அதற்கு முன்னரே வேறு நாடுகளுக்குப் போய்விடும்.

‘ அது இப்போதல்ல. அணில் உலகத்துக்குக் காதல் வந்து விட்டது. அவை எதைப் பற்றியும் எக் கவலையும் கொள்வதில்லை. நான் அவற்றைச் சுடப்போவதில்லை. ஆனல் நீ கவண் எறிந்து அவத்தைப் பிடித்து விடலாம். தம்மைத் தாக்கியது எது என்றே அவற்றுக்குத் தெரியாது. ஒரு பெண்ணிடம் மனசைப் பறி கொடுப்பது என்பது இதுதான். அணிலாயினும் பையனுயினும் இந்நிலை ஆபத்தானதே.” -

சரிதான் ‘ என்றேன் நான். தாத்தாவுக்குத் தத்துவ வெறி பிடித்துவிட்டால், நாம் பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றும் தத்துவ தினம்தான். நாங்கள் அமைதியாய் உட்கார்ந்து, அணில்கள் விளையாடுவதைக் கவனித் தோம். *

தாத்தா தன் குழாயைப் பற்ற வைத்தார். புகையிலேக் கறை படிந்த மீசையை விரல்களால் தடவினர். அணில்கள் என்றுமே புதிர் தான் எனச் சொன்னர். சில சிவப்பாக இருந்தன. சில நரை நிறத்தவை. பூனை அணில்கள் சில. கறுப்பும் நரையும் கலந்த பெரியன நரி அணில்களாம். நீர்நாயின் பற்களோடு. பெண் பூனை அளவு பெரியதாய் இருக்கும் அவை. - பல ரகமானவற்றையும் சிருஷ்டித்தபோது கடவுள் என்ன தான் எண்ணியிருப்பார் என்று உணர நான் முயல்வது உண்டு. அணில்களில் இத்தனை ரகங்களை அவர் ஏன் படைத்தார் என்று என்னுல் தீர்மானிக்கவே முடியவில்லை. நாம் அணில்களை சிருஷ் டிக்க விரும்பினுல், அனைத்தையும் ஒரே அச்சில் அமைத்து, அவ்விவ் காரத்தை அப்படியே ஒதுக்கி விடுவோம். ஆளுல் அவர் ஏகப்பட்ட சின்ன மனிதர்களையும் பெரிய மனிதர்களையும், பலவகை நிறங்கள் பல மொழிகள் பெற்ற மனிதர்களையும் பட்ைத்திருக்கிறார், அதற்கு ஈடுகட்டுவதற்காக அணில்களையும் இவ்விதம் சிருஷ்டித்திருக்கலாம்