பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் தேனும்

கொல்லவில்லை; எந்தக் கடையையும் உடைத்து உட்புக வில்லை. பள்ளியிலிருந்து வெளியேற்றப்படவுமில்லை. அவர்கள் தொடர்ந்து உனக்குக் கல்வி கற்பித்த்ால், என்றாவது ஒரு நாள் நீயே உணரக்கூடும்-மனிதன், அவன் காகிதத்தில் எழுதிவைப் பதிலும், பாறையில் செதுக்குவதிலும், திரைச்சீலையில் தீட்டுவதி: லும், வாத்தியத்தில் இசை எழுப்புவதிலும் தான், அமரநிலை அடைகிருன். நிஜமாகவே எனக்கு வயது அதிகரித்து வருவதை நீ அறிவாய். என்து சொற்பொழிவுக்காக உனது பொறுமையை பும் மன்னிப்பையும் வேண்டுகிறேன். எனக்கு நானே பேசிக் கொள்ளத் தொடங்கிவிட்டதாக நான் நினைக்கிறேன். நீ என்ன தான் செய்ய விரும்புகிறாய் ?’

கொஞ்ச காலமாக உனக்குத் தெரியாமல் நான் செய்து வரும் சிலவற்றை இப்பொழுது காட்டினுல், நீ என்னே அசடன் எனக் கருதமாட்டாய் என்றே நினைக்கிறேன். இல்லையா?*

  • நீ எனக்குக் காட்டுகிற எதையும்-அது சும்மா எவனுக்கும் நீ காட்ட விரும்பாத எதுவாகவேனும் இருந்தால்-அசட்டுத்தன. மானது என்று நான் நினைக்கவே மாட்டேன். வழிகாட்டு, மேக்டவ், பாழாகட்டும் அவன்.........’

நான் இதை ஒருவித அமைதியோடு எழுத வேண்டியிருக் கிறது. ஏனெனில் நான் எளிதில் குழப்பிவிடுபவன். வீட்டி விருந்து சுமார் ஆயிரம் கெஜ தூரத்தில் இருந்த பென்னம் பெரிய காட்டுச் செர்சி மரத்துக்குத் தாத்தாவும் நானும் நடந்தோம்.

மரத்தின்மீது நேர்த்தியாக ஆணியால் பொருத்தப்பட்ட படிகளை

காட்டினேன். ஒரே சமயத்தில் கைகள்ால் பற்றவும், கவும் வசதியான அகலம் பெற்றவை அவை. படிகள் சுமார் முப் அடி உயரம் சென்றன. அதற்குமேல் அம்மரத் தின் பெரும் பிரிவில் ஒரு வீடு இருந்தது.

தி ஸ்விஸ் பேமிலி ராபின்லன் எனும் புத்தகத்தை நான் படித்தேன். அவர்கள் பால்கன் ஹர்ஸ்ட் (வல்லுறு வீடு). என்று பெயரிட்டு, மரத்தின்மீது கட்டிய வீடு என்ன வசீகரித்தது. நானும் எனக்காக ஒரு வீடு அமைத்துவிட்டேன். அந்தச் செர்ரி மரத்தில் விசித்திரமாக நான்கு புறமும் பரவிய கிளைகள் இருந்தன. அந்தப் பரப்பில் ஒரு வீடு அமைப்பது மிகவும் எளிதாயிற்று. பழங்காலத்துக் கப்பியையும் பாரம் சாம்பியையும் கொண்டு பல்கைகளே மேலே ஏற்றுவது கஷ்டமாகத்தானிருந்தது. ஆயினும் வீடு நன்கு அமைந்துவிட்டது. .

பிறர் கவனிப்புக்கு உள்ளாகக்கூடாது என நான் விரும்பிய ஒவ்வொரு பொருளும் இவ்வீட்டில் இருந்தது. ஒடை அருகில் கொஞ்சம் களிமண் கண்டேன். குயவன் உபயோகிக்கும் நல்ல மண். அதைக்கொண்டு நான் சிற்பியாக முயன்றேன். பரிதாப முயற்சிதான். தாத்தாவின் பிரதிமை ஒன்று செய்திருந்தேன். அது நன்கு அமைந்துவிட்டதாக என் எண்ணம். ஆனல் அது

- : ”