பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

சோதித்தார். வில், அம்புகள், ஈட்டிகள் அனைத்தையும் தூக்கி ஞர். வில்லின் நாண் வெறும் கயிருக இன்றி, பச்சைத் தோலில் அமைந்திருந்தது கண்டு, அவர் போற்றும் பாவனையில் நாக்கைக் கொட்டிஞர். பிறகு, நான் அவரிடம் ஏதேனும் கேட்பேன் என எதிர்பார்ப்பவர் போல் என்ன்ை நோக்கிஞர். --

இது ஒருவித முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன்.” என்று தயங்கினேன். நான் என்றுமே மறக்கமுடியாத பதிலை அவர் கூறினர். - - . எனக்கும் இது மாதிரி ஒரு வீடு இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். ஒரு வேட்டையாளனும் கனவானும் ஆனந்த மிாக வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொன்றும் இதில் உள்ளன. தான் ஏன் எனது காலத்தையும் சிரமத்தையும் உன்னிடம் செல விடுகிறேன் என்று உன்னைக் கேட்டேனே முதல் கேள்வி, அதற்கு இப்பொழுது விடை அளித்துவிட்டேன் ‘ என்று தாத்தா சொன்னுர். -

அதன் பிறகு எவ்வளவோ பேர் எத்தனையோ இனிய விஷயங் கனே எனக்குச் சொன்னர்கள், ஆளுல் அன்று தாத்தா மர்த்தி விருந்து கீழிறங்குவதற்கு முன் சொன்ன கடைசிக் குறிப்பை முறியடிக்கும்படி ஒருவரும் பேசியதில்லை. - -

அவனைச் சுற்றிலுமுள்ள பூதாகாரமான பெரியவர்கள் மிக முக்கியமானவர்களாக விளங்கும் ஒரு காலம் ஒவ்வொரு சித்திரக் குள்ளன் வாழ்விலும் உண்டு. அச் சிறுவன்தானே ஒரு பெரியவ குவதற்கு வெகு தூரத்தில் இல்லாத காலம் அது. பெரியவர்கள் சிறுவர் நிலையிலிருந்து வெகு தொலைவில் போய்விடாத காலமும் அதுவே. ஒருவித நன்னயம் நிலவும் என்பதையே குறிப்பிடு கிறேன். அவன் இன்னும் ஆளாகவில்லே என்பதற்காக ஒரு பைய னிைடம் ஆதரவு காட்டுவது மிக மோசம் என்று படும் ஒரு சந்தர்ப்ப மும் உண்டு.

நான் கணக்கிட்ட தன்மையில், தாத்தா என்னைவிட இரு நூறு வயது பெரியவர். ஆகவே, அங்கே தகராறுக்கு இடமிருந்த் தில்லே. நான் பிறப்பதற்கு முன்னரே, அவர் முதிர்ச்சியுற்று, அனுபவத் தேர்ச்சி பெற்றுவிட்டார். இனிமேல் வேட்டையாட இயலாதவாறு மிகவும் களேப்படைந்து ஒய்ந்துபோய், சதா தீயின் முன் படுத்திருக்கவே விரும்புகிற கிழ நாயை ஏற்றுக்கொள்வது போல, நானும் அவரை ஏற்றுக்கொள்ள இசைந்தேன். எதன் நிரூபனத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். அனைத்தையும் தன்னகத்தே கொண்டுவிட்டவர். -

எக்காலத்திலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே எனக்கு நினை விருக்கிறது. சிறுவர்களுக்குத் தோழமை விஷயத்தில் என்ன தேவை என்பதை உணரக்கூடிய பெரியவர்களே என்னைச் சுற்றி லும் இருந்தனர். எவ்வளவு பின் நோக்க முடியுமோ அவ்வள வுக்கு எண்ணிப்பார்க்கும் போதும், நான் இருந்த அளவு சிறிய