பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை

வகை என்ன உணரும்படி செய்த பெரியவர் ஒருவரைக்கூட தினக்க முடியவில்லை. “ . .... :

இது தென்பிராந்தியத்தில் மிகவும் சிறிய ஊர். எளிய சிறு தகரம். ஒரு சினிமா உண்டு.-அது இன்னும் அமுஸ்லி என்றே அழைக்கப்படுகிறது.-பீட் எனும் கிரேக்கன் நிர்வகிக்குக் சிற்றுண்டிச்சாலை ஒன்று இருக்கிறது. இரண்டு மருந்துக்கடை களும் இரண்டு மளிகைகளும் உண்டு. சவ அடக்கம் செய்பவர் ஒருவர். துர்மரண விசாரணை அதிகாரியும் அவரே. மளிகைக் கடைகளில் ஒன்றில் அவருக்கு சம்பந்தம் உண்டு. தங்கும் வசதிகள் பெற்ற விடுதிகள் இரண்டும், ஹோட்டல் என்று எளிதில் பெயர் பெற்றிருக்கக்கூடியது ஒன்றும் இங்கு உள்ளன. - .

நான் ஒரு விஷயத்தைப் பெரிதுபடுத்தி, எங்கள் ஊரைப் பற்றிச் சிறிது கூற விரும்புகிறேன். என் உறவினள் கேட் ஸ்டுவர்ட் ஒரு போர்டிங் விடுதி நடத்தினுள். அலன் ஜின்னி என்ற பெய் ருடைய நீக்ரோ ஒருவன் அவளிடம் பணியாள்ளுக வேலை செய் தான். அவன் பெயர் அலன் ஜின்னியாக அமைந்ததன் காரணம் என்னவென்றால், அவனது தாய் பெயர் ஜின்னி ; நீக்ரோ இனத் தார் ஏகப்பட்ட பட்டப் பெயர்களை அடுக்கிக் கொள்வதுமில்லை. பரிதாபத்துக்குரிய பழக்கம் ஒன்று அலன் ஜின்னியிட மிருந் தது. அவன் குடித்தான். அவன் குடித்துவிட்டால், மிஸ் கேட் டின் சமையல் தயாரிப்புக்கு-அதைத் தேகத்தில் அணியாமல் சாப் பிட்டால் வெகு நன்றாகவே இருக்கும்-சிரமப்பட்டுத் தேடிய ஐம்பது சதம் முழுவதையும் செலவிடுகிற வாடிக்கைக்காரர் உடம்பிலே சூடான சூப்பு எதையாவது கொட்டாமல் இருக்க மாட்டான். ஓர் இரவில், கடலருகே உள்ள மிஸ் கேட் விடுதியில் அலன் ஜின்னி அங்கு மிங்கும் அலைந்து திரிந்த்ான். பெரிய வட் டில் நிறைய இருந்த கொதிக்கும் சூப்பை அவன் ஒரு கனவா னின் நன்கு சலவை செய்யப்பட்ட சட்டையில் கொட்டிவிட் டான். அவர் பெரும் ரகளை செய்தார். அலன் ஜின்னியிடம் சரி யான பேச்சு பேசவேண்டியதுதான் என்று மிஸ் கிேட் தீர்மானித் தாள். அவள் அவனைக் காதைப் பிடித்து இழுத்துச் செல்வது போல் ஒர்புறம் கூட்டிச் சென்றாள். பொன் முட்டைகள் இட்ட வாத்தைக் கொன்றவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கூறும் பழைய நீதிக் கதையை அவனுக்கு எடுத்துச் சொன்னுள்.

மிஸ் கேட் பெரிதாகப் பேசுபவள். உருவகங்களாலும் விளக்கங்களாலும் அவள் அலன் ஜின்னியைத் திணறச் செய்து விட்டாள். தன்னையே கதையில் வரும் வாத்தாகவும், அலனின் பிழைப்பைப் பொன் முட்டைகளாகவும் அவள் மதித்தாள். அலன் ஜின்னி அறிவு பெற்று, ஜனங்கள் மீது சூப்பைக் கொட் டுவதை நிறுத்தாவிட்டால், வாத்து பொன் முட்டைகளிடுவதை எப்படி நிறுத்தும் என்று விவரித்தாள். இது வேறு விதத்தில் அலன் ஜின்னிக்கு சிரத்தை உண்டாக்கியதாகத் தோன்றியது.