பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானகத்தில் உலா I

என்று நான் யூகிக்கிறேன். ஒவ்வொன்றிலும் இது மாதிரித்தான். சுரு மீன்களில் பலரகம். மான்கள் விதம் விதமானவை. காடைகள், முயல்கள், மனிதர் எல்லாம் பற்பல வகைகள். இவை எனக்குக் குழப்பம் தருகின்றன....... அங்கே பார் : .

கணுக்கனுவா யிருந்த கட்டை விரலை அணில்கள் விளையாடிய பக்கம் சுண்டினர் அவர். அங்கு புதிதாக ஆண் அணில் ஒன்று வந்திருந்தது. அது அசிங்கமான வெள்ளை நிறம் பெற்ற பூனே அணில். மயிரடர்ந்த வால் அசைந்தாட அது கிளைமீது குதித்தது. உடனடியாக விளையாட்டு நின்றுவிட்டது. மூன்று அணில்கள்ஆண், பெண், மற்றுமொரு ஆண்-வெள்ளை அணிலை விரட்டின. அணில் முறைப்படி அவை சீறிக் கத்தின. ஆண்களில் பெரியது அதைக் கடித்தது. அது கிர்ர் என உரக்கக் கத்தி, மரத்தின் உச்சிக் கிளைகளுடே ஓடியது. மற்ற மூன்று அணில்களும் ஒரு தினுசாக உறுமியவாறு அதைத் துரத்தின.

இதுவரை இதை நான் பார்த்ததில்லை. பலவித மிருகங் களிலும் விதம் விதமான நிற மாறுபாடுகளைக் கண்டிருக்கிறேன். ஆனல் மங்கிய வெள்ளை நிற அணிலை இதற்கு முன்பு கண்டதே யில்லை. மற்ற மூன்று அணில்களும் அதை எப்படி விரட்டின பார்த்தாயா ? அது ஏன் தெரியுமா?’ என்றார் தாத்தா.

தெரியாது ‘ என்றேன். நான். அது வித்தியாசமாக இருந்ததுதான் காரணம். கடவுள் அதை மோசம் செய்துவிட்டார். இதர அணில்கள் எல்லாம் சிவப்பாய், நரை நிறமாய் அல்லது கறுப்பாக விளங்குகையில், இதை மட்டும் வெள்ளையாக்கிவிட்டார். அணில் உலகில் அது ஒரு புதுமைதான். பிற அணில்கள் அதைக் கண்டதும் என்ன இது ? வெள்ளை அணிலா ? இது அன்னியனுகத்தான் இருக்கும் ‘ என்று தமக்குள் பேசுகின்றன. உடனே அதைத் துரத்துகின்றன. வெள்ளை அணிலாக இருப்பது கஷ்டமானதே. ஒவ்வொரு அணிலும் அதற்கு எதிரி. அது போதுமான தூரம் ஒடித் தப்பிக் கொண்டதும், யாராவது அதைக் கொல்லாது விட்டிருந்தால், அது மாறுபட்ட நிறத்தோடு துரதிர்ஷ்டமுள்ள அணிலாகப் பிறக்காமல், ஒரு முதலே யாகவோ, ஆமையாகவோ, அல்லது வேறு எதுவாகவேனும் பிறந்திருக்கலாமே என்று ஆசைப்படும் என்றே நான் நினைக் கிறேன்’ என்று தாத்தா சொன்னர்.

அணில்கள் விஷயத்தில் எனக்கு அலுப்பு பிறந்தது. எனக்கு வேண்டியது அதிகமான செயலும் குறைவான தத்துவமும்தான். . நாம் காரில் காஸ்வெல் போகலாமே. இரவை அங்கு குடிசையிலேயே கழிக்கலாம். ஆமைகள் முட்டைகளிடுவதற்கு வசதியாக நிலவு பிரகாசிக்கிறது’ என்றேன். - நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அது ந ல் ல யோசனையே. கடல் ஆமைகள் விநோதமானவை. முக்கியமாக, பெளர்ணமி நெருங்கும் ப்ோது மணலில் தன் முட்டைகளைப்