பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை - 315

வளரும் சந்திரன் நீர்மட்டம் குறையாதுகாக்கும். புல்களின் துணி ட்டுமே நீர்ப்பரப்புக்கு மேலே எட்டிப்பார்க்கும். அப்பொழுது தான் தாத்தாவின் வாய் பெருஞ் சிரிப்பாய் மலரும். அவர் துப்பாக்கிகளைப் பெட்டிகளிலிருந்து வெளியே எடுப்பார். உந்து கோலையும் துடுப்புக்களையும் எடுத்துவர என்னை வீட்டுக்கு அனுட புவார்.

1 சதுப்புக் கோழியின் காலம் ‘ என்று தாத்தா சொன்ஞர். பழைய தட்டை அடிப்படகை நாங்கள் பலகை வீட்டிலிருந்து வெளியே இழுத்தோம். அதன் உட்பாகம் மழையில் கெட்டு விடாமலிருப்பதற்காக அதை அங்குதான் கவிழ்த்திருந்தோம். சிறு மோட்டாரின் உதவியால் அதைக் கடற் கால்வாயில் ஒட்டு வோம். புல்பரப்பு வந்ததும் மோட்டாரை நிறுத்திவிட்டு தாத்தா கோவினுல் தள்ளுவார். நீர் அளவுக்கதிகமாக உயர்ந்திருந்தால், துடுப்பினுல் வலிப்பார். --

சதுப்புக் கோழிகள் என நாங்கள் அழைத்த பெரிய ரெயில் பறவைகளைச் சுடுவதில் மிக அதிகமான விளையாட்டு இருப்பதாக இன்று நான் நினைக்கவில்லே. ஆளுல் எத்தனை பறவைகளே நாம் தவறவிடக்கூடும் என்பது ஆச்சர்யம் தருவதுதான். புல்களின் மேலே படகு மெதுவாய் பதுங்கிச் செல்லும்போது, பெரிய பறவைகள் ஒலியிட்டுப் பாய்ந்து, தண்ணிருக்கு மேலே தணிவாகச் சிறகடித்துப் பறக்கும். உண்மையில் அவை பறக்கும் வேகத்தை விட மெதுவாகப் போவதுபோலவே தோன்றும். தண்ணிரைத் தொட்டுக்கொண்டு தணிவாய் பறப்பதனால், அவற்றைப் பின் புறத்தில் சுடவேண்டும் என்ற இயல்பான துடிப்பு நமக்கு ஏற்படும். - -

படகில் ஒரு சமயத்தில் ஒரே ஒருவன்தான் சுடலாம். இல்லாவிட்டால், என்றாவது ஒருநாள் நீ எவளுவது ஒரு ட்டைய ளுேடு படகில் போவாய். அவன் பரபரப்பு அடைந்து, உன் கழுத்தின் பின்புறத்தைச் சுட்டுவிடுவான். சுடுவதற்கு ஏகப்பட்ட சதுப்புக் கோழிகள் உள்ளன. நீ கொஞ்சம்தான் தின் முடியும் என்று தாத்தா கூறினர்.

ஆகவே, அவர் தள்ளுவார் : அல்லது கண்டு வலிப்டார். நான் படகில் சும்மா உட்கார்ந்திருப்பேன். கோழிகள் படகின் கீழிருந்து சத்தமிட்டுக் கிளம்பும். டம்பமாக இரண்டைச் சுடுவ தற்கு ஏற்ற வாய்ப்பு அடிக்கடி கிட்டும். அரை டஜன் பறவை களைப் படகில் சேர்த்த பிறகு, நான் பின்னல் போய், வவிக்கும் பொறுப்பை ஏற்பேன். தாத்தா எச்சரிக்கையோடு முன்பக்கம் போய் துப்பாக்கியைக் கையாள்வார். -

பறவைகளின் பின்னே படகு தள்ளுவது கடின வேலேதான். படகு சகதித் திட்டு மீது சதா முட்டிக் கொள்ளும். உயரமான புல்களில் கொசுக்களும் இதர பூச்சிகளும் இன்னும் அப்பியிருக் கும். சூரியன் மிகக் கடுமையாய்ச் சுட்டெரிக்கும். கனத்த தரை