பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்


போன்ற சதுப்பிலே மணிக் கணக்கில் படகு செலுத்துவதால் நம் முதுகு பலமாக வேதனை தரும். ஆளுல், பெரிய, கபிலநிற, ரெயில் பறவைகள்-மான் கண்களும், நீளக் கால்களும், நீண்டு வ&ாந்து சகதியைக் கிளற அமைந்த அலகுகளும் கொண்டவைபடகு நிறைய இருப்பதஞல், புண்பட்ட கைகளும் சூடுண்ட கழுத்தும் பெற்றது கூடத் தகும் என்றே தோன்றும்.


என்னவாயினும், ஒரு சதுப்பைவிட அதிக வசீகரம் பெற்ற இடம் எதுவுமே இல்லே, சதுப்பு நிலம் உயிருடன் துள்ளித் இடிக்கிறது. அதோ தொலைவில், அகன்ற நீர்ப் பரப்பில் எழும் மெல்லிய அசைவு ஒரு மிங்க் நீந்துகிறது என்று கூறுகிறது. ஒரு கிழட்டு நீலதாரை நம்மைக் கோபமாய் கவனித்து, கடைசி நேரம் வரை காத்திருந்து பின், முதுகு வளைய விகாரமாகப் பறந்து போகிறது. அங்கொரு இடத்தில் ஒரு பிட்டர்ன் பறையோசை முழக்குகிறது. வெள்ளே நாரைகள், தங்களேச் சுடமாட்டார்கள் என அறிந்திருப்பதால், மெளனமாகவும் திடமாகவும் அமர்ந்துள்ளன. செஞ்சிறகுக் கருங் குருவிகள் சதுப்பைக் காதலிக்கின்றன. ஆடும் புல்லின் துண்ணிய துணிகளிலிருந்து, பாபோலிங் குருவி அன்போல் அவையும், தங்கள் உல்லாச கீதத்தை வானிலே விட் டெறிந்தவாறு, ஊசலிடுகின்றன. சதுப்புக்கு மேலேயுள்ள ஆகா யம் எப்பொழுதும் காகங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவை கோபமாய்க் கத்தியபடி தம் தொழிலேச் செய்கின்றன.


முக்கிய பூமியின் ஒரத்தில், மின்னலால் கருகிய மிகப் பெரிய மரம் ஒன்று நின்றது. எனது சொந்தக் கழுகு சதா அதில்தான் அமரும். வருஷத்தில் அநேக நாட்களில், வான வித்தையின் அழகிய காட்சியாக அக் கழுகு திகழ்ந்தது. மீன் பிடிக்கும் பருந்து கள் இரண்டு அப் பகுதியில் திரிந்தன. அவை மீன்களை வேட்டை யாடுவதைக் காண்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஆண் பருந்து, நழுவ விடப்பட்ட குண்டுபோல், கீழ் நோக்கி நேராக வந்து, நீட்டிய தன் கால் நகங்களால் தண்ணிரைத் தாக் கும் ; சிறகுகள் வேகமாய் அடித்துக் கொள்ள, அது போராடும். அதன் நகங்கள் பெரிய நீல மீன் ஒன்றை ஆழக் குத்திப் பிடித் திருக்கும். அந்தப் பருந்து உயரே எழப் பாடுபடுகிற வேளையில், கிழக் கழுகு தன் மர உச்சியிலிருந்து மேலெழுந்து ஆகாயத்தில் பாயும். பருந்து போதுமான உயரம் சேர்ந்து சமன் பெற்று, துடிக்கும் மீனுடன் தன் கூடு நோக்கி விரையும்போது, அதற்கும் மேலே பறக்கும் கழுகு தன் சிறகுகளை மடக்கி, கத்திக்கொண்டே கீழ் நோக்தி வேகமாய் பாயும். பருந்து தப்பி விடுவதற்காக விண் முயற்சி செய்யும். பிறகு மீனை நழுவ விடும். வழக்கமாக, அந்தக் கழுகு, இன்னும் கத்திக்கொண்டே கீழிறங்கி, பருந்தின் அருகாகப் பாய்ந்து, விழுந்த மீன் தண்ணீரை அடைவதற்குள் கிளாக, அதைத் தன் நகங்களால் அழுத்திப் பற்றிவிடும். பிறகு கழுகு தன் கீழ் நோக்கிய பாய்ச்சல்ை விட்டு விட்டு, மெதுவாகச் :