பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவம்பரின் சிறப்பு,

பெற்றுவிட்டாலோ: காடைகள் வேறிடம் போய்விட்டால் என்ன செய்வது என்பன போன்ற, கோரமான பயங்கர எண்ணங்க நம்மைத் துரங்கவிடா. பின்னர், மறுநாள் காலை தெளிவா பிரகாசமாய், தகுந்த அளவு மென்காற்றுடன் விடிகிறது. பிற். பகல் வரை, நமக்குப் பத்து வருஷம் போல் தோன்றும். காலேயில் கிளம்ப வேணும் என்று நான் கெஞ்சிக் கேட்பேன். ஆளுல் தாத்தா, கல் மனதோடு மறுப்பார். - . - காடைகளைக் காலேயில் வேட்டையாடுவதில் அர்த்தமே இல்லை. ஒன்பது, பத்து மணி வரை, குளிர்ந்தால் அதற்குப் பிறகும் கூட, அவை இரை தின்ன வெளிய்ே வரா. அதிகச் சூடோ, மழையோ இருந்தால் அவை வரவே வரா. அப்படியே வெளியே வந்தாலும், அவை தம்மிடம் விட்டு வெகு தூரம் போகா. நீ நாய்களை அடக்குவதற்குள் அவை ஒடி மறைந்துவிடும். வேட்டைக்கு உரிய காடைகள் எல்லாம் இரண்டு மணி நேரத்தில் -மூன்று முதல் ஐந்து மணி வரையில்-அகப்படும். வெகுசிலதான் மறைந்திருக்கும், நாள் முழுதும் வேட்டையாடுவது உன்னேயும் நாய்களையும் களேப்புடையச் செய்யும். அதிர்ஷ்டவசமாக நீ பறவைகளைக் காலேயில் கண்டாலும், வேட்டைக்கு ஒரு எல்லே அமைந்துவிடும். பிற்பகலில் நீ ஒன்றும் செய்ய முடியாது. காலே, மான்களே, வாத்துக்களை, வான்கோழிகளே வேட்டையாடும் நேரம். காடைகள் வெகு நேரம் துங்கும் பறவை ‘’ என்றார் அவர்.

ஆகவே பகல் பூராவும் சுற்றித்திரிவோம். மத்தியான சமயத் தில் கொஞ்சம் சிற்றுண்டி உண்போம். இரண்டு மணிக்குள், நாங்கள் போக வேண்டிய இடத்தில் இருப்போம். நாய்கள் உணர்வுக் கிளர்ச்சியால் உடல் சிலிர்க்க, வாயில் நீர் வடியக் காட்சிதரும். நாங்கள் பல இடங்களில் வேட்டையாடுவது உண்டு. ஆனல் வழக்கமாக ஸ்பிரிங் ஹில் என்ற இடத்தில்தான் ஆரம்பிப் டோம். அது அதிர்ஷ்டம் வாய்ந்தது என்று எண்ணினுேம், அதற்கு முன், அருகாமையில் உள்ள மூன்று நான்கு கூட்டங்களில் முயற்சி செய்வோம். நாய்கள் எல்லாப் புதர்களையும் மோந்து பார்த்து, தங்கள் உடலில் உள்ள அசட்டுத்தனத்தை அகற்று வதற்கு நேரம் கொடுக்கவே அது.

நாய்கள், பழுப்புற்ற பட்டாணி வயல்களில் பாய்வதை, அல்லது கசப்பு பெர்ரி புதர் ஒரங்களில் திரிவதை, அல்லது மஞ்சளாகிக் காய்ந்த சோளக் கட்டைகள் நின்ற வயல்களில் குறுக்கும் நெடுக்கும் போவதை, தங்கள் தலைகளே நிமிர்த்து, வால்களே ஆட்டிக் கொண்டு பந்தயக் குதிரைகள் போல் ஒடு வதைக் காணும்போது, ஒரு சிறுவன் என்ன உணர்வுகளே அடை கிருன் என்று விளக்க முயல்வது சிரமம்-மிகக் கடுமையானதுதான். அப்புறம், அந்தக் கணம், சுமார் ஒரு வருஷத்துக்குப் பிறகு நிகழ்வது. முதல் நாய் முதலாவதாக மோப்பம் பிடிப்பதுே அதன் கிளர்ச்சியை மற்ற நாய்களுக்கும் உணர்த்துவது எல்லா