பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையும் முதுமையும்

காட்டினல், அவற்றை மனிதன் சுடுவான் என்பதை இளம் நாங் கள் புரிந்து கொள்கின்றன. எனவே அவை பறவைகளே மனித எனிடம் சேர்க்கின்றன. இப் படி எல்லோரும் - நாய்கள், மனிதன், பறவைகள்-ஒன்றுபட்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். இனிமேல் அது முயல்களே விரட்டுவது போன்ற, விளையாட்டு அல்ல. அது மனிதரின் வேலையாகும்.”

நான் சரணடைந்தேன். தாத்தா என்னை வசமாக மாட்டி விட்டார். “ நான் போய்த் துப்பாக்கி எடுத்து வருகிறேன். நீ என்ன வெளியே துரத்தலாம். நான் நியூமோனியா சம்பாதிக் கும்போது, நீ காக்ஸ் கடைக் கண்ப்பருகில் சுகமாக இரு. இந்தப் பருவ நிலையில் நாய்கள் வெளிக் கிளம்புமோ என்னவோ ’’ என்றேன்: . - -

அவை போகும். அவை தொழில்வாதிகள் : எனக்குத் தெரிந்த சிலர்போல் பகுதிநேர வேட்ட்ையாளர்கள் அல்ல. போய் அவற்றை இட்டுவா. நீ மெழுகு துணிக் கால் சட்டையும், மெழுகு துணிச்சட்டையும் அணிவது நல்லது. காடு நீர்மயமாக இருக்கும்’ என்றார் தாத்தா. - -

ஐயா, நான் அந்தக் குறிப்பிட்ட தினத்தை என்றும் மறவேன் என நினைக்கிறேன். நான் ஒரு மீனுக இல்லையே என்பதில் மிகுந்த மகிழ்வு கொண்டேன். ஏனென்றால் அன்று காடு ஒரு கிணற்றை விட அதிக ஈரம் பெற்றிருந்தது. தணிவான செடிகள், கசப்பு பெர்ரிப் புதர்கள், துடைப்பப் புல் மீதெல்லாம் சிறுசிறு நீர்த் துளிகள் படிந்திருந்தன. மரங்கள் ஒரே நிதானமாக நீர் சொட் டின. நிலைத்த மழை பெய்யவில்லை. பாதித் துரலாகவும், பாதி மூடுபனியாகவும் எங்கும் பரவி நின்றது. துப்பாக்கிக் குழல்கள் மேலிருந்த என் கைகள், உருக்கு இரும்போடு ஒட்டிக் கொண்டது போல், விறைத்திருந்தன. மழைநீர் துப்பாக்கிக் கண்ணில் தேங் கிக் குழல்களுக்கு நடுவிலுள்ள ஒடை வழியாக கீழே வடிந்தது. நாய்கள், நனைந்த நாய் எதுவும் எப்பொழுதும் காட்சி தருவது போல்-தரைமேல் போடப்பட்ட ஒட்டர் மாதிரி-துக்ககரமாய் தோன்றின.

மழை எங்குமே துக்ககரமானதுதான். ஆயினும், பிப்ரவரி யில் நனைந்த காடுபோல் உற்சாகமற்றது ஒன்றுமே இல்லை. மரத் து.ாள் குவியல்கள் நன்கு நனைந்து இறுகிக் கடினமாகி, கரும் பழுப்பு நிறம் பெறுகின்றன. மரங்களின் பசுமை எல்லாம் ஈரத்தால் கருமை அடைகின்றன. அதனல் வர்னபேதங்கள் புலணுவதில்லே. உழுதநிலம் அசிங்க்மாய், அழிகற்ற சாம்பல் நிறமாய் இருக்கிறது. மிஞ்சி நிற்கும் சோளக் கொண்டைகள் புள்ளி விழுந்து சுருங்கித் காணப்படுகின்றன. கருகிய கிளைகளில் ஒட்டியிருக்கும் புருத்தி யின் சோகச் சிறு கொண்டைகள், பெரிய நகரத்தில் வழிதவறி விட்ட அநாதைப் பிள்ளைகள்போல் தோன்றின. நல்ல ஆண்டவன் பறவைகளுக்குச் சிறகுகளும், மிருகங்களுக்கு உரோமத்தோலும்