பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானகத்தில் உலா 2I

நாங்கள் காஸ்வெல்லை அடைந்தோம். எளிய இனிய உணவு தயாரித்தோம். தாத்தா மண் எண்ணெய் ஸ்டவ்வுடன் மல்லாடிக் கொண்டிருந்தபோது, நான் உடையைக் களைந்துவிட்டுக் கடலில் நீந்தினேன். நான் நீரிலிருந்து வெளியேறிய போது, தாத்தா முனகியவாறே சமையல் வேலையை முடித்துக் கொண்டிருந்தார். பெண்களை விட ஆண்களே சிறந்த சமையல்காரர்கள்; அவர்கள் வீண் சந்தடி செய்வதில்லை; ஆறேழு கறி வகைகள் பற்றி அலட்டிக் கொள்வதில்லை; இரண்டு பொருள்களைச் சமைப்பதோடு திருப்தி கொள்கிறார்கள் என்று அவர் முணுமுணுத்தார். வழக்கம் போல், உப்பிட்ட பன்றித் தொடையும் மு. ட்டை யும் தா ன் உணவு. பெட்டைக் கோழிகளையும் பன்றிகளையும் படைத்ததோடு கடவுள் வேலையை நிறுத்தியிருக்கலாம்; பன்றிக் கறியும் முட்டைகளும் வெள்ளைச் சோளமுமே மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியம் என்று தாத்தா சொல்கிறார்,

நாங்கள் சாப்பிட்டு விட்டு, சந்திரன் உதயமாவதைக் கானக் குடிலின் முன்புறம் சென்றாேம். விரைவிலேயே அது கடவினுள் ளிருந்து மேலெழுந்தது. ஆழ்கடலின் அடியிலிருந்து வருவது கிரேக்கர் காண்பதற்காக வெளிப்பட்ட வீனஸ் தேவதை அல்ல என்றே தாம் கருதுவதாகத் தாத்தா சொன்ஞர். திங்கள் எழு வதைக் கண்ட குடிகார கிரேக்கன் எவனே அதையும் பெண் களையும் ஒப்பிட்டுக் குழப்பம் அடைந்திருக்கலாம். .

இந்தச் சமயத்திலேயே உனக்கு ஒரு பாடம் சொல்வது தல்லது. வீனஸ் தெ மிலோ (Wenus de Milo) என்று இனி நீ சொல்லக் கூடாது. அப்ரடைட் (Aphrodite) என்பது தான் அவள் பெயர். மிலாஸ் எனும் கிரேக்கத் தீவிலிருந்து அவள் வந்தாள். வீனஸ் ரோமன் மங்கை. மிலோ இத்தாலியில் உள்ளது. தெ ஃபிரெஞ்சுச் சொல். ஒரு பெரும் தவறு எப்படிக் கால காலமாக வாழ்ந்து வரக்கூடும் என்பது குறிப்பிடத் தகுந்தது ‘ என்று தாத்தா அறிவித்தார்.

கிரேக்கர், ரோமானியர், பொதுவாக சரித்திரக்காரர்கள் பற்றி எல்லாம் அவர் ஒரு பிரசங்கம் செய்து முடிப்பதற்குள் அம்புலி கொஞ்ச தூரம் உயரே வந்து விட்டது. ஆமையைத் தேடிச் செல்ல நாங்கள் தீர்மானித்தபோது அவர் எகிப்தியர் பற்றியும் பிரமிடுகள் (Pyramid) பற்றியும் பேசத் தொடங்கியிருந் தார். நான் வெறும் பாதங்களோடு, இறுகி மணி மணியாயும் குளிர்ந்து ஈரமாயும் இருந்த மணலில், அலைகள் சலசலக்கும் இடத் தருகே ந ட ந் தேன். இரவு ஒளி நிறைந்து விளங்கியது. அவ் வெளிச்சத்தில் தாராளமாகப் புத்தகம் படிக்கலாம். இதை நான் தாத்தாவிடம் சொல்லவில்லை. சொன்னல், நான் மிகைப்படுத்திப் பேசவில்லை என்பதை நிரூபிப்பதற்காக ஒரு புத்தகத்தைத் தேடி எடுத்து வரும்படி என்னே அனுப்பிவிடுவார்,

இரவு வேளையில் கடலோரத்தில் ஒருவித அற்புத அழகு நிலவு