பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. தாத்தாவும் பேரனும்

வாத்தைக் கொல்லவும் அது போதும் என்று எனக்கிருந்த இளடிை உற்சாகத்தில் நான் எண்ணினேன். : -

ஒவ்வொரு நாளும் நான் அங்கு போய், சோள வயலில் உள்ள எனது சிறு மறைவிடத்தில் காத்திருந்தேன். ஒவ்வொரு தின மும் வேட்டை நேரம் தீர்ந்த பிறகே வாத்துக்கள் வந்தன. ஒவ்வொரு நாளும் தான் எழுத்து, இரண்டு துப்பாக்கிகளோடு திரும்பினேன். நான் ஏமாற்றாததன் காரணம் வெகு எளியது. வேட்டைப் பாதுகாவலருடன் எப்பொழுதாவது ஏ ேத னும் தோல்லை ஏற்படுமானல், அவர் வார்டன்கள் பக்கமே சேருவார் என்றும், நான் சிறையில் கிடந்து தவித்தால் அவர் கவலையுறம் போவதில்லை என்றும் தாத்தா சொல்லிவிட்டார். வேட்டைச் சட்டங்கள் காரியார்த்தமாகவே இயற்றப்பட்டுள்ளன ; அவற்றை அனுஷ்டித்தால்தான் அடுத்த வருஷம் சுடுவதற்கும் கொஞ்சம் மிஞ்சும் என்று அவர் கூறினர்.

அன்று தான் நான் குண்டுகளை மாற்றினேன். வாத்துக்கள் வராததஞலும், எனக்கு அலுப்பு ஏற்பட்டதாலும், நான் வெகு துரத்திலிருந்த ஒரு காகத்தைச் சுட்டேன். முற்றிலும் கெட் டித்த, முப்பது அ ங் கு ல இரட்டைக் குழல் துப்பாக்கியால் அதைச் சுட்டேன். சுமார் அறுபதுகெஜ தூரத்தில் அது கல் போல் கீழே விழுந்தது. மற்றாெரு நாள் சில புருக்களைச் சுட்டேன். ஏனெனில் அன்றும் வாத்துக்கள் உயரமாக வடிவில், சாப்பாட் டைப் பற்றி, தீவிரம் இல்லாமலே, குரல் கொடுத்தபடி பறந் தன. ஆஞல், முடிவில் நான் பொறுமையின் மதிப்பைக் கற். றேன் : சுடாது சும்மா அங்கேயே இருந்தேன். என்றாவது வாத் துக்கள் வரும் ; நான் காக்கைகளையும் புருக்களையும் சுடாதிருந் தால் அவை அவசியம் வந்தே தீரும் என்று நான் கருதினேன்.

இலையுதிர் காலத்தின் பிற்பகுதி அது. சோளக் கொண்டை கள் உறை பனியால் பழுப்பேறித் தோன்றின. சுருண்ட மஞ்சள் இலகளில் புகையிலே விஷ நீர் ரேகைகள் போல் கறை படிந் இருந்தன. வெறித்தனமாக வளையும் தண்டுகளில், நன்கு விளை யாத தானிய மணிகள் இன்னும் நிறையவே இருந்தன . அம்மணி களின் உச்சியில் காய்ந்த கரும் பழுப்பு நிற மீசைகள் இருந்தன ; உள்ளே யிருக்கும் விதை தெரியும்படி உமிகள் பிரிந்திருந்தன. சோள வயலில் எவ்வளவு தனிமை உணர்வு ஏற்படுமோ, அப் படித் தனிமை நிலவியது. பழைய சோள வயலைப் போல் மக்கிப் பாழடைந்தது வேறெதுவும் இல்லை. ஆயினும் அங்கே இன்னும் உணவு நிறையவே உண்டு. அதை வாத்துக்கள் அறிந்திருந்தின. அதைத் தின்று தீர்க்கும் வரை அவை அங்கிருந்து போகா, அதைக் காலி பண்ணும் வேலையை அவை இன்னும் சரியாகத் தொடங்கக்கூட இல்லை.

இலையுதிர் காலப் பிற்பகுதி நாள், அதன் மட்டில் கூட, அற். புதமான விஷயம்தான். ஏனென்றால், பன்றி கொல்லும் வேளை