பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ் ஒப்கேமீன்

குழம்பின. அபூர்வமாக ஒரு சிறுவன் அனுபவிக்கிற மோசமான இரவுகளில் அது ஒன்று. -

இரவு இரண்டு மணி சுமாருக்கு நான் எழுந்து, ஆடை தரித்து, நாய்களே அழைத்துக்கொண்டு, ஆற்றின் பக்கமாக உலாவப் போனேன். சந்திரன் ஏகதேசம் பூரணமாகத் தோன்றியது. அப் பொழுது வானத்தில் உயரமாகவும் அழகாகவும் மிதந்தது. அது. எவர்ோ சாகப்போவது போலவும், அதுபற்றிய அனைத்தையும். அவை அறிந்தது போலும், நகரெங்கணும் நாய்கள் ஊளையிட்டதை நன்கு கேட்க முடிந்தது. ஒரு விஷயத்தை நான் என் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. ஆழாக்கு மூளையில் ஒரு படி அறிவைப் புகுத்த முடியாது ‘ என்று தாத்தா சொன்னரே, அதைத்தான். நான் ஒரு மேகத்தைப்போல் தனியாய், வருத்தமாய் திரிந்தேன்இதுவும் இங்கிலீஷ் பாடத்தில்தான் வந்துள்ளது-ஆழாக்கு மூளை பெற்றவர்களில் நானும் ஒருவனே என்ற வியப்பு எனக்கு ஏற்பட் டிருந்தது. துறை நோக்கி நடந்தபோது, என்னுடையதை. மாகாணி மூளை என்பதே பொருந்தும் என நான் முடிவு செய்தேன். பிறகு அங்கு உட்கார்ந்து, பாதங்களே ஆட்டியவாறே, சந்திரன் தண்ணிரைப் பலமாக மாற்றுவதைக் கவனித்தேன்.

அப்புறம் நான் வேறு விஷயம் பற்றி எண்ணத் தொடங்’ கினேன். தாத்தா கற்றுத் தந்தவற்றில், எனக்கு ஏற்கனவே எவ்வளவு விஷயங்கள் தெரியும் என்பது பற்றி நினைத்தேன். இவ்: விஷயங்கள் என் மண்டையில் தாறுமாருகத் துள்ளின. ஒரு நாய்க் குட்டியை நல்ல பறவை நாயாகப் பயிற்றுவது எப்படி என்பதை. தான் அறிவேன். ஒரு வான்கோழியை அல்லது ஒரு வாத்தை எப்படி அழைப்பது என அறிவேன். படகை வலிப்பது பற்றியும், மானை நிறுத்தும் வகையையும் அறிவேன். நிலாவையும், அலேயை யும், மீன்களையும் வேட்டையையும் அவை எப்படி பாதித்தன என் பதையும் அறிவேன். மணலில் தனது மென்மையான முட்டை களே இடும்போது, கடல் ஆமை பெரிதாகக் கண்ணிர் வடிப்பதை, அறிவேன். மணல் நண்டை வீசி, ஆட்டுத்தலே மீனைத் துiண்டிலில் பிடிப்பது எப்படி என்றும் அறிவேன். முகாம் அமைப்பது, தி மூட்டுவது, ஒரே இழுப்பில் முயலைத் தோலுரிப்பது பற்றியும் அறி வேன். காட்டில் சமைப்பது, வீச்சுவலே எறிவது, ஒரு புருவை இழுக்கடித்துச் சுடுவது, சிப்பியைப் பற்றுவது, கரை வலையை இழுப்பது பற்றி எல்லாம் அறிவேன்.

எவ்வளவோ விஷயங்களைப் பற்றி எவ்வளவோ நான் அறிவேன் எனத் திடீரென்று முடிவு செய்தேன். அவற்றில் சில எனக்குக் கற்பிக்கப்பட்டன. சிலவற்றை நாளுகவே கற்றேன். ஆளுல் நான் அறிந்தவை-மீலாவின் அப்ரோடைட்டை வினஸ் தெ மிலோ என்று கூறக்கூடாது, கானேப் பறவைகள் எப்படி வேலை செய்கின்றன என்பன போன்ற சின்ன விஷயங்கள்-தாத்தாவிட மிருந்தே பெறப்பட்டன என்று எனக்கு அதிகம் தோன்றியது.