பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தான் உண்மையான அறிவு பெற்றேன். அது பசுமையாய், குளுமையாய், பயங்கரமாக விளங்கும். இலைகள் ஊறிப் பழுப்பு நிறம் பெற்ற ஒடை மெதுவாக அசையும், நீரோர் ஒக் மரங் களின் வெறுமையான கிளைகளில் மிஸில்டோ செடிகள் குவிந் திருக்கும். அணில் கூடுகள் மரங்களின் கீழ்ப்பகுதியில் பழுப்பாய், தனித்துக் காணப்படும். சைப்ரஸ் மரங்களின் முண்டுகள் மிக உயர்ந்திருக்கும். புருக்களின் சோக அழைப்பு பேய்த்தனமாக ஒலிக்கும். ஒற்றைப் புருவின் கடைசி துக்கக் கதறல், சிதறிய காடைகளின் தினமான கிரீச்சொலி, விப்பூர்வில் பறவையின் முதல் புலம்பல், வஞ்சக ஆந்தையின் அச்சமூட்டும் அலறல் எல்லாம் எழும். பிறகு சந்திர உதயமும், மரங்கள் சித்திரிக்கும். பேய் உருவங்களும் தென்படும். -

இந்தப் பொருளுடன் நான் என் வாழ்வு முழுவதும் கழித் திருந்தேன். ஆயினும் அதற்கு முன்பு அதை முற்றிலும் கவனித். தேனில்லே-அதை ஒருபோதும் பார்த்ததில்லை, ஒருபோதும் நுகர்ந்ததில்லே, ஒருபோதும் கேட்டதில்லை, ஒருபோதும் தனிமைப் படுத்தியதில்லை, ஒருபோதும் தொட்டதில்லை. குடிக்க உபயோ சிக்கும் சுரக்காயின் உட்புறம் ரம்பத்தைப் போல் சொரசொரப் பாக இருக்கும் எனும் விசித்திர உண்மையை நான் அன்று வரை எண்ணியதேயில்லே. மக்ளுேலியா புஷ்பங்கள் நாம் தொட்ட வுடன் பழுப்பாக மாறிவிடும் என்பதையோ, உறவினள் மார்ஜி வீட்டு முற்றத்தில் வளர்ந்த மாதுளையின் பழங்களில் தோலும் சதையும் விதைகளும் மட்டுமே உண்டு என்பதையோ நான் சிந்தித்ததில்லே.

இரவு வரும் வேளையில் நாட்டுப்புறம் ஒரே சோக மயமாக இருக்கும் ; அதனுல்தான் இருள் படியும் காடுகள் வழியே போகும். போது நீக்ரோக்கள் தங்களுக்குத் துணையாக இருக்கும்படி சீட்டி அடிக்கிருங்கள், அல்லது பாட்டுப் பாடுகிறார்கள் ; பெரிய கொம் பரைக்கு நான்கு கால்கள் இல்லை, மூன்றே கால்கள் தான்-இஷ் உண்மைகள் மீது நான் என்றுமே என் எண்ணத்தைச் செலவிட்ட தில்லை. புகை கீழே விழாமல் மேலேயே கிளம்பும் என்பதோ, உறை பணியானது இறுகிய நீர்த்துளிகள் என்பதோ என் பிரக்ஞையில் பதிந்ததேயில்லே, நான் பன்றிக்கறி ஜாசேஜ் சாப்பிட்டிருக்கிறேன். ஆனல் அதன் தோல் புள்ளிகள் பெற்றிருக்கும் என்றும், அது குடல்களாலேயே ஆக்கப்பட்டது என்றும் நான் ஒருபோதும் கவனித்ததில்லை. -

இவை எல்லாம் அன்று ஈ. ஜி. குட்மேன் பண்ணையில் எனக்கும் பட்டது. நியாயபூர்வமாக நான் கல்விப் பயிற்சியைக் குறை கிற வேண்டியவளுனேன். தி டிக்ளேன் அண்ட் ஃபால் இல்லாமல், * ரோல்ப் இன் தி உட்ஸ் இல்லாமல், ஃபால்ஸ்டாவ் இல்லாமல், லாம்பின் வாட்டிய பன்றி இல்லாமல், (உண்மையில் க்ராக்ளிங், என்பது என்ன என்று நான் எண்ணியது கூட இல்லையே!--சொல்