பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

சடத்தது. காற்று வீசி வீசித் தாக்கிய போது, கண்ணுடி தடுங்கியது. - - - - - -

தாத்தாவும் நானும் சும்மா உட்கார்ந்திருந்தோம். சொறிந்து கொண்டும், அமைதியற்றும் இருந்தோம். நாங்கள் எங்கே உட் கார்த்தாலும் சரி, உடனே எங்கள் பாட்டி, மிஸ் லாட்டி, ஒரு அழுக்குத் துணி அல்லது துடைப்பம் எடுத்துக் கொண்டு எங்களுக் குப் பின்னுல் வந்து நிற்பாள். நாங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், அவள் எங்கள் பக்கம் வருவாள். பெண்கள் செய் வது போல், சுற்றிலும் அமளிப்படுத்துவாள். அந்த நாற் காலியை அவள் வேறொரு இடத்துக்கு மாற்ற விரும்புகிருள் என்பது எங்களுக்குத் தெரிந்துவிடும். அந்த இடத்தில் அது சிறப்பாகத் தோன்றாதுதான். ஆயினும் அவளுக்குச் சிறிது திருப்தி அளிக்கும். எங்களை அவள் ஒரு இடத்திலிருந்து இன் ளுெரு இடத்துக்குத் துரத்தியபடி இருந்தாள். இறுதியில் தாத்தா நெடுமூச்சுயிர்த்தார். தாம்ஸனின் பில்வியார்ட் அதைக்குப் போவோம் வா. குறைந்த பட்சம், அங்கு பெண்கள் இல்லை. நியமப்படி, நான் பூல் ரூம்களை எதிர்க்கிறவன். ஆனால், சில சமயங்களில் ஒருவனுக்கு தன் வீட்டுப் பெண்களிடமிருந்து தப்புவதற்கு வேறு இடம் எதுவுமே கிடைப்பதில்லை ‘ என்றார். இதற்குள் மிஸ் லாட்டி ஜமுக்காளத்தை சுத்தம் செய்வதற் ஆாக எங்களருகில் வந்தாள். நாங்கள் எழுந்து, மூன்று கட்ட ட்ங்களுக்கு அப்பாலுள்ள பில்லியார்ட் விளையாடுமிடத்துக்கு நடந்தோம். அங்கே கிடந்த உயரம்ான ஸ்டூல்மீது அமர்ந்து கோக் குடித்தோம். பந்துகள் உருளும் ஒலியைக் கேட்டோம். மேஜைகள் மீதுள்ள குளுமையான பச்சைநிற விரிப்பின் மேல் சாய்ந்தபடி விளையாடுவோரைக் கவனித்தோம். குழிகளுக்குள் பந்துகளைத் தள்ளுவதற்காக அவர்கள் சில சமயம் அசாத்திய மான நிலைகளில் வளைந்து காணப்படுவர். தாம்ஸனின் பூல் ரூம் அன்று நிறைந்திருந்தது. இன்று இந்த ஊர்ப் பெண்கள் அனை வருக்கும் மழைக் காலச் சாமான் நகர்த்தும் வியாதி ஏற்பட் டிருப்பது நன்கு புலனுகிறது ‘ என்று தாத்தா சொன்னர்.

அவர் தனது தொங்கு மீசையை இழுத்தார். குழாயைப் பற்ற வைத்தார். விளையாடுகிறவர் ஒருவர் எட்டாவது பந்தை ஒரு பக்கத்துக் குழியினுள் தள்ளுவதைக் கவனித்தவாறே, அவர் தனக்குத் தானே பேசுவதுபோல் கூறிஞர்.

  • உலகத்தில் உள்ள பிராணிகளில் எல்லாம் பெண்கள்தான் ழிகவும் விசித்திரமானவர்கள். நான் என் வாழ்க்கை முழுவதும் பெண்களே, சகல சீதோஷ்ண நிலைமைகளிலும், ஆராய்ந்திருக் கிறேன். சரியான விடையில்லாத பெருங் கணக்கிற்கு வகை செய்கிற, எதேச்சையாகத் திரியும் ஐந்து காட்டிலேர் கடலிலோ வேறு எதுவும் கிடையாது. உபயோகமற்ற ஒரு நாயை நாம் பழக்கி விடலாம் ; மீனை ஏமாற்றலாம் ; நரியை வஞ்சிக்கலாம்;