பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தாத்தாவும் பேரனும்

யோகிக்க ஒரே ஒரு சட்டம்தான் உண்டு. அதை எதிர்மதை ஒப்புதல் சட்டம் அல்லது மாறுபடும் இங்கிலீஷ் யோசனை என நான் குறிப்பிடுவேன். அவர்கள் நமக்கு இரண்டு அடிகள் முன்னே இருக்கிறார்கள் என்று எண்ணி, நாம் ஒரு எட்டு பின் நகர்ந்து, அவர்களைத் தடுமாற வைப்பது என்ற ஆதாரக் கருத் தின்படி செயல்புரிய வேண்டும்.

பெண்கள் பிறவியிலேயே வக்கிர குணம் உடையவர்கள். அவர்கள் புரிந்துகொள்ள முடியாத, அல்லது பங்குபெற இயலாத, எதன் மூலமும் ஒருவன் மகிழ்வடைவது அவர்களுக்கு வெறி யூட்டும். அவர்கள் தங்கள் முழங்கைகளே முத்தமிட்டு, ஆண் களாக மாற முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆண்களாக மாற முடியாதபோது, அவர்கள் வெறுப்படைகிறார்கள். ஆகவே அவர்கள் மிகச் சிறு வயதிலேயே பையன்களோடு சண்டை பிடிக் கிரு.ர்கள். தங்களுக்கென்று ஒரு முரட்டுப் பையனைப் பிடித்து, அவனை வீட்டின் செல்வப் பிரர்னியாக மாற்றும்போது அவர்கள் தங்கள் இறுதி வெற்றியை அடைகிருச்கள். அல்லது அவனை மாற்ற முயல்கிறார்கள்.

ஏசவும், புகையிலே மெல்லவும், ஒரு சிறிது மது குடிக்கவும், பூல் விளையாடவும், போக்கர் ஆடவும், சுருட்டுப் புகைக்கவும், வேட்டைக்குப் போகவும், மீன் பிடிக்கவும் ஆசைப்படுகிரு.ர்கள் ஆண்கள். பொதுவாக இவை எல்லாம் பெண்கள் கலந்து கொள்ளக்கூடிய விளையாட்டுக்களாகக் கருதப்படவில்லை. எனவே: அவர்கள் அவற்றின்மீது கோபம் கொள்கிரு.ர்கள். -

‘ மிதமாக அனுஷ்டிக்கப்படின், இவற்றில் எதுவும் கெட்டது: அல்ல. ஒரு மனிதன் ஆரம்பத்திலேயே நல்லவகை இருந்தால், அவன் காட்டிலோ, கடலிலோ, அல்லது பூல் ரூமிலே தானே தீமை எதுவும் பெறமாட்டான். நான் புகை பிடிப்பதையும், அவ்வப்போது கொஞ்சம் குடிப்பதையும் நீ கவனித்திருக்கிருப். ஆளுல் எந்த ஜெயிலும் என்னை அறிந்ததில்லை. நான் கொடுக்க வேண்டியதைச் செலுத்திவிடுகிறேன். உபதேசியாரிடம் பணி வாகப் பேசுகிறேன். எதையும் - இனிய தருமத்தையும், வேக வைக்கும் உருளைக்கிழங்கையும் கூட-நீ ஒரு அளவுக்கு மீறிக் கை யாளக்கூடும்; நல்ல விஷயத்தை கெட்டதாக மாற்றிவிட முடியும். ஆனல் பெண்கள், அதில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்றால், அது கெட்டது என்று தாமாகவே எண்ணிவிடுகிறார்கள். செஸ்டர்டன் என்கிற இங்கிலீஷ்காரன் ஒருவன் இதுபேர்ல் ஒரு வரி எழுதியிருக்கிருன் :) இவ்வுலகில் பெண்கள் புரிந்துகெர்ள் ளாத விஷயங்கள் மூன்று உள்ளன : சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். சமத்துவம் விஷயத்தில் பெண்களைப் ப்ற்றிக் கொஞ்சம் கடுமையாக அமைந்துள்ளது என்று நான் நினைக் கிறேன். ஆனல், சுதந்திரமும் சகோத்ரத்துவமும் பற்றி அவர் களுக்குக் கிரகிக்கும் சக்தி ஒரு துளிகூடக் கிடையாது.”