பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கனம் இருக்கும் ; அதைப் போன்ற பணமதிப்பும் பெறும் என்று தசத்தா சொன்னுர். - - - தாத்தாவிடமுள்ள விசேஷம் இதுதான். ஒவ்வொன்றுக்கும் விளையாட்டு பொம்மை ரீதியான முறை ஒன்றை அவர் எப்பொழு தும் கொண்டிருந்தார். உர உற்பத்தித் தொழிற்சாலைக்குப் போக வேண்டிய கெட்ட நாற்றமுடைய மீன்களை ஒரு சிறுவன் தேடுவது என்பது ஒரு விஷயம் உற்சாகமற்ற செயலும்கூட. ஆனல், பெரிய வெள்ளேத் திமிங்கல வேட்டையில் ஈடுபட்ட காப்டன் என்ற பட்டத்தோடு ஒரு பையன் இருப்பது முற்றிலும் வேருன ஒரு நிலைமையாகும். ஐயா, வானவெளியிலே அவ்வளவு உயரத் தில், மீன்களைத் தேடும் கண்களோடு, நான் இருந்தபோது, இந்தப் பிரபஞ்சத்தின் தலைவன் நானே என்ற உணர்வு எனக்கு ஒருவாறு ஏற்பட்டிருந்தது.

போஜி மீன்களின் கூட்டத்தைக் கண்டதும் நான் கீழ்நோக்கி, ‘ பிரிட்ஜ் அஹோய் !’ என்றே கத்துவேன். ஏதாத்தா !” என்று தான் சுல்பமாகச் சொல்லியிருக்கலாம். மீன் முன்பக்கம் வலது புறத்தில் இரண்டு பாயின்ட் முன்னே !’ என்று, முறையாகச் சொல்லக்கூடியது எதையாவது சொல்வேன். நான் கத்துவதற்கு முந்தியே தாத்தா மீன்களைப் பார்த்திருப்பார், சும்மா மரியாதைக் காகக் காத்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றும்.

மீன்கள் செல்லும் திக்கு நோக்கி நாங்களும் போவோம். துரத்தும் படகுகள், அவற்றுக்குரிய முளைகளிலிருந்து வெளியே தொங்கும். ஆடும் அப்படகுகளிலிருந்தபடி வலையை வீசுவார்கள். மிகவும் பெரிய, மினுமினுப்பான, வேர்த்துக்கொட்டும் ஆட்கள் வலையை இழுப்பர், தூக்குவர், உறுமுவர். மீன்கள் அல்போல் பொங்கி, கப்பலருகே வந்து சேரும். என்ஜின் வலையை தளத்துக் குள் சேர்க்கும், செதிளடித்துக் குதித்தபடி கிடக்கும் மீன்கள் கட்ல் பொருள்களின் செல்வக் களஞ்சியமேதான். -

  • இந்தத் தடவை என்ன கிடைத்திருக்கிறது பார்ப்போம் : என்று கூறி, தாத்தா சக்கரத்தை டாம் அல்லது பீட் அல்லது வேறு எவர் வசமாவது ஒப்படைப்பார். -

அதுதான் சிலிர்ப்பு தரும். ஏனெனில், போஜிகளுடன் வேறென்னவெல்லாம் கடலிலிருந்து கிடைத்திருக்கும் என்பது நமக்குத் தெரியவே தெரியாது. சுரு மீன்கள்-சுத்தித் தலையன் களும், சுளுகுப்பாரை மூக்கன்களும்-எப்பொழுதும் கிடக்கும். எப்பொழுதாவது ஒரு பெரிய மீன் கிடைக்கும், அடிக்கடி பெரு மீன் டார்பான் வடக்கே எவ்வளவு தூரம் தேடி வரும். மக்கரெல், நீலம், டால்பின் போன்ற தின்பதற்கு இனிய மீன்களும் கலந்து கிடக்கும். உடனே எனக்குப் புதிய வேலை வரும். என் பாதங் களை ரப்பர் பூட்ஸில் திணித்துக் கொண்டு, நான்தளத்தில் இறங்கி மீன் குவியலுக்குள் நடந்து, நல்ல மீன்களைப் பிரித்து எடுப்பேன். அவற்றை ஆட்கள் பங்கு போடுவர். அப்புறம் கரை சேர்ந்ததும்