பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்துக்கும் வாத்துக்கும் வித்தியாசம் 25

விட்டு, நானுக விசாரிக்க வேணும் என்று காத்திருப்பார். ஆராயும் ஆவல் அறிவுக்கு அவசியமானது. அறியும் ஆவல் ஒரு போதும் பூனேயைக் கொன்றதில்லை. மந்தபுத்தியால் பூனை செத்தது. அல்லது எலிகளை அதிகம் தின்றதால் இருக்கலாம் என்று அவர் சொல்வார். - .

கமனக் கணிப்புக் கலை என்பதை விளக்குவது கஷ்டம் தான். என்னல் முடியுமா என்று பார்க்கிறேன். பறவையின் வேகம், அது பறக்கும் கோணம், காற்றின் வேகம், அது வீசும் திசை, பறவை பறக்கும் உயரம், துப்பாக்கியின் அளவு, சுடுதல் வேகம் அல்லது வெடி மருந்தின் சக்தி முதலியவைகளை ஒன்று சேர்த்துக் குழப்பி எடுத்தால் சரியான விடை கிடைக்கும். இது புத்தகத்தில் காணக்கூடிய விளக்கமில்லை தான். ஆனால் எனது விளக்கம் ஆகும். ஒரு சில வாத்துக்களை நீ தப்பவிட்ட பிறகு நான் இதை உனக்கு எளிதில் விவரிக்க முடியும் ‘ என்று தாத்தா கூறிஞர்.

மறுநாள் காலை, உதயத்துக்கு முன்னரே நாங்கள் எழுந்தோம். அப்பொழுது குளிர் மிக அதிகம். அதனுல் மூச்சுக் காற்று கூட நம் முன்னுல் உறைந்து நிற்பது போலிருந்தது. காதுகள் சிறிது தொடப்பட்டால் கூட உதிர்ந்து விழுந்து விடும் போல் தோன்றி யது. கதகதப்பான படுக்கையை விட்டு எழுந்து, ஐஸ் போல் குளிர்ந்த கால் சட்டைகளையும், மிகவும் குளிரான பூட்ஸையும் அணிவது சித்திரவதையாகவே இருந்தது. .

நான் மாடியிலிருந்து கீழே வந்தபோது, தாத்தா அடுப்பங் கரையில் இருந்தார். அவர் அடுப்பில் தீ மூட்டிக் கொண்டிருந்தார். பழைய, பெரிய, சதுர அடுப்பு அது. கட்டைகள் எரியத் தொடங் கியதும் அது இளஞ் சிவப்பு நிறம் பெற்று, பெரிய உலைபோல் அறை முழுவதையும் சூடாக்கும்.

தாத்தா தன் குழாயைப் புகைத்தபடி சில முட்டைகளே உடைத்து சிறு கொப்பரையில் ஊற்றிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அதில் ரொட்டித் துண்டுகள் பன்றிக் கொழுப்புடன் கலந்து கொதித்தன. வறுத்த பன்றி இறைச்சித் துண்டுகளை ஒரு தகரத் தட்டில் பரப்பியிருந்தார். காப்பிச் சட்டி அடுப்பின் பின் புறம் இரைந்து கொண்டிருந்தது.

குளிர்ச்சியான வாத்து வேட்டைக்காரனப் போல் முற்றி லும் குளிர்ந்தவன் வேறு யாரும் கிடையாது. வேண்டுமானல், பசியோடிருக்கும் குளிர்ந்த வாத்து வேட்டையாளச் சொல்லலாம். சூடான உணவுப் பொருள் மூலம் நீ உன் வயிற்றில் நெருப்பு உண்டாக்கினால், அது உன் தேகம் முழுதும் பரவும். அதனுல் உன் உள்ளெலாம் கதகதப்பு நிலவும். உன் காதுகளும் கைகளும் குளிர்ந்து விட்டாலும் பரவாயில்லே. ஒருவன் காலை உணவு அதிக மாக உண்டால், அவன் பிற்பகல் உணவு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என நான் சதா சொல்வேன். வா. இதை உண்ணு ‘ என்றார் அவர்.