பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறுப் பள்ளி-இடுகாடு

மனிதத்தன்மை பெற்றவர்கள் என்று குறிப்பிடுவது கஷ்டம்தான். ஒனும், முடிவில் அவர்கள் அவசியமானவர்களே. இல்லா விடில் நாம் இங்கிருக்க மாட்டோம். இது ஒரு தடுமர்த்தம். நான் மனதில் கொண்டிருந்தது ஒரு கட்டளையாகும் : மேன்மை பாக இராதே. அது நாட்டைப் பாழாக்குகிறது ”” என்று தாத்தா சொன்னர். - - -

  • மேன்மை என்பது என்ன ?’ என்று கேட்டேன். * நல்லது. அது பல விஷயங்களைக் குறிக்கும். உயர் குலத்து ஆதித்தவன் என்று அது பொருள்படும். அதாவது, அவன் ஒரு மேன்மகன். அதாவது, அவனுடைய அப்பா போதுமான பன்ம் வைத்திருப்பதால், தன் கைக்ளை உழைப்பில் ஈடுபடுத்த வேண் டாத நிலைபெற்ற ஒருவன். அது ஒரு பகுதி அரசியலாலும், ஒரு பகுதி பரம்பரையாகவும், ஏகப்பட்டது யார் எதை அடைந்துன் ளனர் - அடுத்தவனேவிடச் சதுப்பில் அதிகமான பன்றிகள் பெற்றிருப்பது - என்பதாலும் ஏற்பட்டது. பிறகு அது ஒரு தனித்த மனநிலைக்கு வீழ்ச்சி பெற்றுவிட்டது. ஒரு சிலர், தாங்கள் அதிகமான பன்றிகளை வைத்திருப்பதால், மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணலாயினர். உடனே அவர்கள் முகத்தில் ஒரு கடுமையான தோற்றம் பரவியது. தங்களைப்போல் மேன்மை பெருத 1 திருத்தவேண்டும் என்ற துடிப்பும் அவர்களுக்கு ஏற்பட்டது. போகப்போக, எவளுவது ஒருவன் - அதாவது, மேன்மை பெருத எவனே ஒருவன்-அவர்களைச் சுடு: கிருன். அத்துடன் அது ப்ன்றிகளின் நிலைக்கு இறங்கிவிடுகிறது. நான் சொல்லுவது உனக்குப் புரிகிறதா ?”

இல்லை. நான் அவ்வளவு மேன்மை பெறவில்லை.” * வருந்துவதற்குரிய இரண்டு பழக்கங்களே நீ என்னிட மிருந்து கற்றுக்கொண்டாய் என்று நான் உணர்கிறேன்-என்னைப் போல் வார்த்தைகளை உபயோகிப்பது ஒன்று ; மற்றது, அவ்வப் போது மிகவும் யோக்கியமாக நடந்துகொள்வது. இதஞல் உனக்கு நண்பர்கள் ஏற்படமாட்டார்கள். ஆயினும், தகுதியற்ற மேன்மை பெறுகிறாய் என்ற காரணத்துக்காகச் சுடப்படுவதி லிருந்து இது உன்ன்ைக் காப்பாற்றி விடும். இதல்ை நீ அலுப்படை

iருயா ?’ என்றார் அவர்.

ஆம். மிகவும் உண்மையாகச் சொல்வதானல் நீ என்ன நாக்ஸ் பண்ணைக்கும் ஷாலட்டுக்கும் இடையே ஒரிடத்தில் விட்டு விட்டாய் லாக்வுட் ஃபாலி அருகே, என்பேன்.”

நான் அறியவேண்டும் என்ற விருப்பத்தைத் துரண்டும் ஒரு மனிதர் அவர். நீரோடை அருகே அவருக்கு ஒரு வீடு இருக் கிறது ; தனது சொந்தப் படகில் போய் கடலைப் பார்க்கவேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறது. ஆகவே அவர் ஒரு படகு கட்டு வதில் பல வருஷங்களைச் செலவிடுகிறார். அது வெகு அழகாக அமைகிறது. ஆனல் ஒடை மீதுள்ள பாலத்தின் அடியில் புகமுடி