பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

இருமலையும் சேர்த்தேதான்-சரியான வழியில், ஒரே ஒரு தடவைதான் செய்கிறாய். நான் பிறகு உன்னைப் பார்ப்பேன் ? என்று அவர் கூறிஞர்.

தாத்தா தன் குழாயை வாயில் திணித்தார். சிரமத்தோடு நடந்து போனார். அவர் அபூர்வமாகத்தான் வெடுவெடென்று இருப்பார். ஆளுல் இன்று அவர் மனநிலை சரியில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. வெகு காலமாக அவர் உடல் நிலை மோச மாக இருந்தது. நோய் பெற்றிருந்தது அவரது நரம்புகளைக் கடு மையாகத் தாக்கிற்று என நான் யூகித்தேன்.

திடீரென்று நான் மிகுந்த துயரம் அடைந்தேன். ஒரு மணி தருடன் நன்கு பழகிப்போனுல் எப்படியிருக்கும் என்பதை நீங் கள் அறிவீர்கள். அவர்கள் மாற்றம் பெறுவதை நாம் காண முடியாது. தான் தாத்தாவிடம் வெகுவாகப் பழகியிருந்தேன். அதளுல், அவ்வளவு காலமும் அவர் வயது முதிர்ந்து வருகிறார், அதிக பலவீனமும், மேலும் கொஞ்சம் பைத்தியமும் பெறுகிறார் என்பது எனக்கு ஒருபோதும் மனதில் படவில்லை. ஆனல் இப் பொழுது அவர் தெருவில் நடந்து போவதைக் கவனித்தேன். அவர் மிக மெதுவாக நடந்தார். அவர் கால்கள் இழுபட்டன. தோள்கள் அதிகம் கூனியிருந்தன. இந்த எண்ணம் சட்டென்று: என்னைத் தாக்கியது : அவர் அதிக வயது அடைகிறார் ; நானும் அப்படியே. பள்ளிக்கூடம் மூடட்டும் என்று, அல்லது கிறிஸ்து மஸ் வருவதற்காக, அல்லது பறவைப் பருவம் துவங்குவதற்காகக் காத்திருக்கும் ஒரு வாழ்வில், ஒரு தேதிக்கும் இன்னொரு தேதிக் கும் இடையேயுள்ள காலத்தை நான் வெறுமனே குறித்துக் கொண்டு, இடைப்பட்ட பொழுதை எல்லாம் வீணுக்கி வருகி றேன் என்பது எனக்கு இதுவரை என்றுமே தோன்றியதில்லை. தாத்தா மூப்படையும்போதே நானும் வளர்ந்தேன் என்பதும் எனக்குத் தோன்றவேயில்லை. திடீரென்று சூரியன் அவ்வளவு பிரகாசம் இல்லாததுபோல் ஆகிவிட்டது , மென்மேகங்கள் ரேகை யிட்ட வானம் அவ்வளவு இனியதாகத் தோன்றவில்லை. - பெரும்பாலானவர்கள் நோக்குகிறார்கள் ; ஆ ைல் ஒரு போதும் எதையும் பார்ப்பதில்லை என்று தாத்தா சொல்வது வழக் கம். ஒரு சமயம் அவர் என்னிடம் சொன்னர் : 1. பெரும்பலர் கண்கள் திறந்திருந்தும் குருடராய் வாழ்க்கையைக் கழிக்கிறார் கள். சிஞ்ச் பூச்சி முதல் இப்பி வரை எதுவும்-நீ அதை உண்மை யாகவே கவனித்து, அதுபற்றிச் சிந்தித்தால்-சுவாரஸ்யமானது தான். அவர் கூறியதன் பொருளே நான் இப்பொழுது உணரத் தொடங்கினேன். - *

நான் வீட்டின் கீழ்ப் பகுதியில் நுழைந்து, துடுப்புகளை எடுத் தேன். மேல் பகுதிக்குப் ப்ோய் வீச்சுவல்ை, லேசான மீன் தூண் டில், தளவாடப் பெட்டி ஆகியவற்றைச் சேகரித்தேன். எல்லா வற்றையும் சுமந்து, ஆறு நோக்கி நடந்தேன். நான் செய்த