பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தெளிவான குளங்களில் கோடைகால வாத்துக்கள் நீந்தின : மூழ்கின. சிறிய டைடேப்பர்கள் நம்ப முடியாத அளவு நேரம் நீருக்குன்னே இருந்தன. கிரிப், மெர்கான்லர் இன வாத்துக்களைக் சுடுவதை நான் வெகு காலத்துக்கு முன்பே விட்டுவிட்டேன். அவை தின்ன ருசியாக இருப்பதுமில்லை: சுடுவதற்கு வேடிக்கை யானவையும் அல்ல. எனினும் நான் அவற்றைக் கவனிப்பது மணல் மேடுகளின் விளிம்புகளில் லேண்ட்பைப்பர் பறவை: கள் தங்கள் நெட்டைக் கால்களில், குலுங்கும் பெருமிதத்தோடு நடந்தன. பெரிய அலகும், ஆராயும் நோக்கும் பெற்ற இரண்டு சிப்பீப் பறவைகள் தண்ணீர் நெடுகிலும் தணிவாகப் பறந்து மணல் கரைக்குச் சற்று, தள்ளி. சகதியில், நான் ஒரு துடுப்பை ஆழப் பதித்து, அதில் ஏன் படகைக் கட்டினேன். பிறகு வலையை எடுத்துக் கொண்டு, நீரில் சிறு குமிழிகள் எழுப்பிக் கிடக்கும் இருல்களின் கூட்டம் ஒன்றைக் காணும் வரை சுற்றி அலைந்தேன். இரண்டு தடவை வலே வீசியதில் நாலேந்து டஜன் தூண்டில் இரை கள் கிடைத்தன. முல்லட் மீன்கள்-பத்துப் பன்னிரண்டு அங்குலம். நீளமுள்ள பெரிய மீன்கள்-துள்ளிக் குதித்தன. எனக்குத் துரண் டிவில் அதிர்ஷ்டம் ஏற்படாது போனுலும் கூட, சாப்பாட்டுக்குக் கவலை நேராதபடி வலை கவனித்துக் கொண்டது. >

மெது நண்டுகளின் காலம் அதுதான். நான் என் பாதங்க ளாலேயே ஆறு நண்டுகள் பிடித்தேன். சுறுசுறுப்பான கால்..விரல் கள் பெற்ற சிறுவன் சதா இப்பி அல்லது எதன் மீதாவது இடறு வான். நான் படகை அவிழ்த்துவிடத் தயாராவதற்குள், அதை நண்டுகள், துடிக்கும் இருல்கள், முல்லட் மீன்கள், நீலமும் கருநீல மும் கலந்த, வெள்ளை விளிம்பு பெற்ற, பெரிய இப்பிகள் ஆகிய வற்றால் நிரப்பிவிட்டேன். o - - - ... . . . மீன் பிடிக்கும் மடுபற்றி எவரும் உங்களை ஏய்க்க விடாதீர்கள். சாதாரண நீரில் நாள் முழுவதும் தூண்டில் எறிந்தாலும், தேகப் பயிற்சி தவிர உமக்கு வேறெதுவும் கிட்டாது. ஆழமான மடு, அல்லது பழஞ் சேதப் பகுதி, சிப்பிகள் ஒட்டிய கம்புகள் இவை: அறிமுகமாகியிருந்தால், எந்த ரக மீன்கள்ை நாம் விரும்புகிருேமோ அதற்குத் தக்கபடி, துரண்டில் எறிவது நல்லது. நிச்சயமாக மீன் களைத் தரும் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்த ஒரு மடுவுக்கு என் சிறு படகைச் செலுத்தினேன். இந்த ஆழம்-அந் நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டிராத-உறைய வைக்கும் பெட்டி மாதிரி. கரு மீன், பெர்ச், ஒரு சில ட்ரெளட்டுகள் இங்கு மண்டியிருந்தன. இவை பிரமாதமானவை அல்ல; எனினும் பதார்த்தம் ஆக்குவ தற்கு மிக இனியன. நான் மகிழ்ச்சியோடு இரண்டு மணிநேரம் மீன் பிடித்தேன்._என் படகின் பின்புறத்தில் கட்டியிருந்த கோணியை நிரப்பினேன். அக்காலத்தில் ஒரு சிறு தூண்டிலில்